×

எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜெட்லி: நள்ளிரவில் திடீர் விசிட் அடித்த அமைச்சர்கள்!

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை மருத்துவமனையில் மத்திய அமைச்சர்கள் நள்ளிரவு சந்தித்தனர் புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை மருத்துவமனையில் மத்திய அமைச்சர்கள் நள்ளிரவு சந்தித்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி. 66வயதாகும் இவருக்குக் கடந்த ஓராண்டுக் காலமாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் கடந்த 9ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜெட்லி அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அவரது
 

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை மருத்துவமனையில் மத்திய அமைச்சர்கள் நள்ளிரவு சந்தித்தனர்

புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை மருத்துவமனையில் மத்திய அமைச்சர்கள் நள்ளிரவு சந்தித்தனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி. 66வயதாகும் இவருக்குக் கடந்த ஓராண்டுக் காலமாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில்  கடந்த 9ஆம் தேதி  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜெட்லி அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.  ஆனால்  அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை சார்பில் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

இந்நிலையில்,  அருண் ஜெட்லியின் உடல்நிலை  மோசமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  நேற்று பிற்பகலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மருத்துவமனைக்குச் சென்று அருண் ஜெட்லியைப் பார்த்தார். இதைத் தொடர்ந்து  நேற்று இரவு 11.15 மணியளவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், இணை அமைச்சர் அஸ்வினி சவுபே ஆகியோர் மருத்துமவனைக்குச் சென்று அருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.