×

எப்படி இருந்த கேப்டன் இப்படி ஆயிட்டாரே… பரிதாபத்தில் விஜயகாந்த்..!

ஜெயலலிதாவையே நாக்கை துருத்தி அடிக்கப்பாய்ந்த தைரியசாலி விஜயகாந்த் இப்போது ஒரு மாவட்டச்செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் பம்மும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு விட்டாரே என புலம்பி வருகின்றனர் தேமுதிக தொண்டர்கள். எழுந்தால் சிங்கம் இளைத்தால் பூனை என்கிற கதையாகி விட்டது விஜயகாந்தின் நிலைமை. அவரது உடல் நலத்தை போலவே கட்சியில் நலமும் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. அதற்கு சமீபத்திய உதாரணம் இந்த சம்பவம்… ‘‘தேனி தேமுதிக மாவட்ட செயலாளராக கிருஷ்ணமூர்த்தி, கடந்த 3 ஆண்டுகளாக
 

ஜெயலலிதாவையே நாக்கை துருத்தி அடிக்கப்பாய்ந்த தைரியசாலி விஜயகாந்த் இப்போது ஒரு மாவட்டச்செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் பம்மும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு விட்டாரே என புலம்பி வருகின்றனர் தேமுதிக தொண்டர்கள்.

எழுந்தால் சிங்கம் இளைத்தால் பூனை என்கிற கதையாகி விட்டது விஜயகாந்தின் நிலைமை. அவரது உடல் நலத்தை போலவே கட்சியில் நலமும் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. 

அதற்கு சமீபத்திய உதாரணம் இந்த சம்பவம்… ‘‘தேனி தேமுதிக மாவட்ட செயலாளராக கிருஷ்ணமூர்த்தி, கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வருகிறார்.  இவர் கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாகவும், நிர்வாகிகளை மதிக்காமல், அவர்களை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. ‘நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கூட தங்கள் தரப்பிடம் ஆலோசனை கேட்கவில்லை. கட்சி செலவுக்கு கூட பணம் தரவில்லை. இவரை உடனே மாற்ற வேண்டும்’ என தங்களது உள்ளக் குமுறல்களை நிர்வாகிகளும், தொண்டர்களும் மனுக்களாக, கட்சித் தலைவர் விஜயகாந்திற்கும், அவரது மனைவி பிரேமலதாவிற்கும் அனுப்பி வருகிறார்கள். 

 50க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகளின் கடிதத்தை பார்த்த கட்சி தலைமை குழப்பத்தில் இருக்கிறது. காரணம் ஏற்கனவே இருக்கிறவர்களை தக்க வைக்கவே படாதபாடாக இருக்கிறது. ஏற்கெனவே பலரும் கொத்து கொத்தாக கட்சி தாவி போய் விட்டார்கள். இப்போது மாவட்ட செயலாளர் மீதும்  நடவடிக்கை எடுத்து, அவர் உட்பட ஆதரவாளர்கள் மொத்தமாக வேறு கட்சிக்கு தாவினால் என்ன செய்வது?  தேர்தல் முடியட்டும். ரிசல்ட்டை பார்த்து விட்டு முடிவு எடுப்போம்.  இப்போது ஏதாவது நடவடிக்கை எடுத்தால் கூட்டணியை பாதிக்கும். அதுவரை பொறுமையாக அனுசரித்துக் கொள்ளுங்கள்’’ என்று ஆறுதல் சொல்லி இருக்கிறார்கள். 

சட்டசபைக்குள் முதல்வராக இருந்த ஜெயலலிதாவையே நாக்கை துருத்தி அடிக்கப்பாய்ந்த தைரியசாலி விஜயகாந்த் இப்போது ஒரு மாவட்டச்செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் பம்மும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு விட்டாரே என புலம்பி வருகின்றனர் தேமுதிக தொண்டர்கள்.