×

என்னா வேணும்னாலும் செய்யுங்க… விடக்கூடாது… அமித் ஷாவால் அடி வயிறு கலங்கும் தமிழக அரசியல்வாதிகள்..!

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மீதான வழக்குகளை அதிகபடுத்த முடிவு செய்துள்ள சிபிஐ, அவரது நீண்டகால உதவியாளரான கே.வி.கே. பெருமாள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். திஹார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை தொடர்ந்து சிறையிலேயே வைத்திருக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ? அனைத்தையும் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டு இருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக கடந்த ஆகஸ்டு 21-ம் தேதி டெல்லியில் உள்ள வீட்டில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.
 

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மீதான வழக்குகளை அதிகபடுத்த முடிவு செய்துள்ள சிபிஐ, அவரது நீண்டகால உதவியாளரான கே.வி.கே. பெருமாள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

திஹார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை தொடர்ந்து சிறையிலேயே வைத்திருக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ? அனைத்தையும் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டு இருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக கடந்த ஆகஸ்டு 21-ம் தேதி டெல்லியில் உள்ள வீட்டில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அவர் திஹா சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மீதான வழக்குகளை அதிகபடுத்த முடிவு செய்துள்ள சிபிஐ, அவரது நீண்டகால உதவியாளரான கே.வி.கே. பெருமாள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

கே.வி.கே. பெருமாள், மத்திய நிதி அமைச்சகத்தில் கண்காணிப்பாளர் பதவியில் இருந்த காலத்தில், நிதித்துறை இணை அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். கே.வி.கே. பெருமாள் தமிழர் என்பதுடன் இலக்கிய ஆளுமையாகவும் திகழ்ந்தவர். டெல்லி தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவராக பணியாற்றியவர். ப.சிதம்பரத்தின் நிழலாகத்தான் பெருமாள் வலம் வந்தார்

கடந்த 2010க்குப் பிறகு சிதம்பரத்துக்கும், பெருமாளுக்கும் இடையில் மெல்ல மெல்ல சில உரசல்கள் எழுந்தன. இதற்கு சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், பெருமாளை எடுத்தெறிந்து பேசியதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

ப.சிதம்பரத்தோடு பெருமாள் இருந்த 2007-10 கால கட்டத்தில்தான் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்குக்கான முக்கியச் சம்பவங்கள் நடந்து இருக்கின்றன. ஏற்கனவே சிதம்பரத்தை சந்தித்தது பற்றி இந்திராணி சிபிஐயிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார். அதன் அடிப்படையில் ப.சிதம்பரத்தை இந்திராணி, எத்தனை முறை சந்தித்தார், எங்கெங்கே சந்திப்பு நடந்தது, எவ்வளவு நேரம் நடந்தது ஆகிய முழு விவரங்களும் கே.வி.கே.பெருமாளுக்குத் தெரியும். இந்த அடிப்படையில்தான் அவரை விசாரணைக்கு உட்படுத்தி, இந்திராணி- சிதம்பரம் சந்திப்புக்கான ஆதாரங்களை திரட்ட முடிவு செய்திருக்கிறது சிபிஐ.

இவர் தரப்போகும் தகவல்கள்தான் ப.சிதம்பரம் மீதான பல வழக்குகளுக்கு பெரும் ஆதாரம் என நம்புகிறது டெல்லி. கே.வி.கே.பெருமாளிடம் தற்போதைய நிலையில் ஒரே ஒரு முறை விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது.
ஆனால், அந்த விசாரணையில் ப.சிதம்பரத்துக்கு எதிராக எந்த தகவலையும் பெருமாள் தெரிவிக்கவில்லை. இதேபோக்கை அடுத்தடுத்த விசாரணையில் கடைபிடித்தால் பெருமாள் மீதான பழைய புகார்களை தூசிதட்டி தமது இன்னொரு முகத்தை காட்டும் முடிவில் டெல்லி அதிகார மையங்கள் உள்ளன.