×

என் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம்: மார் தட்டிக்கொள்ளும் தினகரன்

தன் உடம்பில் ஓடுவது அண்ணா திமுக ரத்தம் என்றும் எந்த காலத்திலும் திமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நெல்லை: தன் உடம்பில் ஓடுவது அண்ணா திமுக ரத்தம் என்றும் எந்த காலத்திலும் திமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திமுகவுடன் டிடிவி தினகரனின் அமமுக ரகசிய கூட்டணியில் இருப்பதாகவும், இதனால் தான் ஸ்டாலினை விட எடப்பாடியை தாக்கிப் பேசி தினகரன் அரசியல் செய்து வருவதாகவும் பரவலான கருத்துகள்
 

தன் உடம்பில் ஓடுவது அண்ணா திமுக ரத்தம் என்றும் எந்த காலத்திலும் திமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

நெல்லை: தன் உடம்பில் ஓடுவது அண்ணா திமுக ரத்தம் என்றும் எந்த காலத்திலும் திமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திமுகவுடன் டிடிவி தினகரனின் அமமுக ரகசிய கூட்டணியில் இருப்பதாகவும், இதனால் தான் ஸ்டாலினை விட எடப்பாடியை தாக்கிப் பேசி தினகரன் அரசியல் செய்து வருவதாகவும் பரவலான கருத்துகள் இருந்து வருகிறது. 

அதனை உறுதிப் படுத்தும் விதமாக, மதுரையில் ஓர் தனியார் விடுதியில் ஸ்டாலினும், தினகரனும் ரகசிய சந்திப்பு நடத்தியதாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது அம்மா’வில் செய்தி வெளியாகியது.

இந்நிலையில், நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “என் உடம்பில் ஓடுவது அண்ணா திமுக ரத்தம். எந்த காலத்திலும், எதற்காகவும் திமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன். அமமுகவின் வளர்ச்சியைப் பிடிக்காத எதிரிகள் நான் பதவி விலகுவதாகப் பொய் பரப்புரை செய்கின்றனர். 

அரசியலில் தவறான முடிவெடுக்கும் கட்சிகள் வீழ்ச்சியை சந்திக்கும். தேமுதிக அப்படிதான் வீழ்ந்தது” என தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினை கலாய்த்த வீடியோ: