×

‘எனக்கும் தான் சீட் தரல நான் மைத்ரேயன் மாதிரி அழுதனா?’ அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்!

எனக்கும்தான் சீட் தரவில்லை, நான் என்ன மைத்ரேயன் போல அழுதேனா என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை: எனக்கும்தான் சீட் தரவில்லை, நான் என்ன மைத்ரேயன் போல அழுதேனா என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக உள்பட 5 மாநிலங்களவை எம்.பிக்களின் பதவிக்காலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது. அதனால் அதிமுக உறுப்பினர்கள் லட்சுமணன், அர்ஜுனன், மைத்ரேயன், ரத்னவேல் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.ராஜா ஆகியோர் மாநிலங்களவையிலிருந்து விடை பெற்றனர்.
 

எனக்கும்தான் சீட் தரவில்லை, நான் என்ன மைத்ரேயன் போல  அழுதேனா என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை:  எனக்கும்தான் சீட் தரவில்லை, நான் என்ன மைத்ரேயன் போல  அழுதேனா என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக உள்பட 5 மாநிலங்களவை எம்.பிக்களின் பதவிக்காலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது. அதனால்  அதிமுக உறுப்பினர்கள் லட்சுமணன், அர்ஜுனன், மைத்ரேயன், ரத்னவேல் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.ராஜா ஆகியோர் மாநிலங்களவையிலிருந்து விடை பெற்றனர். அப்போது உறுப்பினர்கள் மத்தியில் பேசிய  மைத்ரேயன் கண்ணீர்  விட்டு அழுதார். 

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுகவிலுள்ள  இரட்டை தலைமையால்  நல்லதும் உள்ளது கெட்டதும்  உள்ளது. கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என நல்ல முறையிலிருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். எனக்கு மக்களவை தேர்தலில் தென்சென்னையில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் கிடைக்கவில்லை. மாநிலங்களவை எம்.பியாக மீண்டும் தேர்வு செய்யப்படுவேன் என நினைத்தேன். அதுவும் நடக்கவில்லை. இது எனக்கு வருத்தமளிக்கிறது’ என்றார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,  அரசியல் ஏற்றத்தாழ்வு என்பது சகஜம் தான். ஒருகாலத்தில் எனக்குக் கூடத் தான் பதவி அளிக்கவில்லை. நான் அழுதேனா? இல்லை வீட்டில் முடங்கிப் போய்  இருந்தேனா? தொடர்ந்து கட்சிக்காக உழைத்தேன். அதனால் ஜெயலலிதா எனக்கு மீண்டும் அழைத்து பதவி வழங்கினார். பதவி கிடைக்கவில்லை என்பதற்காகக் கட்சியை விமர்சனம் செய்வது தவறு’ என்று கூறினார்.