×

எடப்பாடியை விளாசிய மோடி! சந்தோஷத்தில் ஓபிஎஸ்… அம்மா அரசியல்னா சும்மாவா?

இந்திய பிரதமரும், சீன அதிபரும் மகாபலிபுரத்தில் சந்திப்பதையடுத்து சென்னை நகரின் மீது உலகத்தின் மொத்தப் பார்வையும் விழுந்திருக்கிறது. பாதுகாப்பு விஷயத்தில் அதிகவனமாக இருந்து, இரவு பகல் பார்க்காமல் போலீசார் கடந்த ஒரு மாத காலமாகவே ஈடுபட்டு வந்தனர். 49 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரவேற்பு, ஆயிரக்கணக்கான மாணவிகளின் ஆடல், பாடல், பாரம்பரிய நடனம், வாழைமரத் தோரணம், காய்கறிகளால் வளைவுகள், மின் விளக்குகள், கோடிக்கணக்கில் செலவு செய்து நவீன புல்தரைகள் என்று கனஜோராய் அவ்வப்போது விசாரித்து முழு ஈடுபாட்டுடனும்
 

இந்திய பிரதமரும், சீன அதிபரும் மகாபலிபுரத்தில் சந்திப்பதையடுத்து சென்னை நகரின் மீது உலகத்தின் மொத்தப் பார்வையும் விழுந்திருக்கிறது. பாதுகாப்பு விஷயத்தில் அதிகவனமாக இருந்து, இரவு பகல் பார்க்காமல் போலீசார் கடந்த ஒரு மாத காலமாகவே ஈடுபட்டு வந்தனர். 49 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரவேற்பு, ஆயிரக்கணக்கான மாணவிகளின் ஆடல், பாடல், பாரம்பரிய நடனம், வாழைமரத் தோரணம், காய்கறிகளால் வளைவுகள், மின் விளக்குகள், கோடிக்கணக்கில் செலவு செய்து நவீன புல்தரைகள் என்று கனஜோராய் அவ்வப்போது விசாரித்து முழு ஈடுபாட்டுடனும் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கவனித்து வந்தார் முதல்வர் எடப்பாடி.

இந்திய பிரதமரும், சீன அதிபரும் மகாபலிபுரத்தில் சந்திப்பதையடுத்து சென்னை நகரின் மீது உலகத்தின் மொத்தப் பார்வையும் விழுந்திருக்கிறது. பாதுகாப்பு விஷயத்தில் அதிகவனமாக இருந்து, இரவு பகல் பார்க்காமல் போலீசார் கடந்த ஒரு மாத காலமாகவே ஈடுபட்டு வந்தனர். 49 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரவேற்பு, ஆயிரக்கணக்கான மாணவிகளின் ஆடல், பாடல், பாரம்பரிய நடனம், வாழைமரத் தோரணம், காய்கறிகளால் வளைவுகள், மின் விளக்குகள், கோடிக்கணக்கில் செலவு செய்து நவீன புல்தரைகள் என்று கனஜோராய் அவ்வப்போது விசாரித்து முழு ஈடுபாட்டுடனும் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கவனித்து வந்தார் முதல்வர் எடப்பாடி. ஆனாலும், க்ளைமேக்ஸ்ல மொத்த முயற்சியும் தனக்கு தீராத களங்கத்தை ஏற்படுத்திக் கொடுத்ததை ஜீரணிக்க முடியாமல் தவித்து வருகிறாராம்… இதைக் கூட ஒழுங்கா கவனிக்க முடியலையா’ என்று மோடி நேரடியாகவே எடப்பாடியிடம் கடிந்துக் கொள்ள அதிமுக தலைமை ஆட்சி பயத்தில் பயங்கர அப்செட் என்று காதைக் கடிக்கிறார்கள் சீனியர் அதிகாரிகள்.

அப்படியென்ன விஷயம்? 
திபெத்தியர்களின் எதிர்ப்பு தான் காரணமாம். இத்தனைக்கும் இது குறித்து மோடி முன்கூட்டியே எடப்பாடியிடம் அலர்ட் செய்திருக்கிறார். சென்னையில் இருக்கும் திபெத்தியர்களை தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருங்கள். முடிந்தால் சீன அதிபர் திரும்பிச் செல்லும் வரையில் காவலில்  வைத்திருங்கள் என்று ஒரு வாரத்துக்கு முன்பே பிரதமர் அலுவலகத்தில் இருந்து, தமிழக முதல்வரின் அலுவலகத்துக்கு ஆணை வந்துவிட்டதாம். உடனடியாக முதல்வர் பதறிப்போய் சென்னையில் மட்டுமல்ல. காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் என்று சுற்றுவட்டாரங்களில் இருக்கும் எல்லா மாவட்டத்து திபெத்தியர்களையும் தடுப்புக் காவலில் வைக்கும்படி காவலர்களுக்கும் உத்தரவிட்டிருந்தாராம். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எல்லாம் செய்தும், இன்று சீன அதிபர் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓட்டலுக்குள் நுழையும் போது, அந்த நேரம் பார்த்து சரியாக திரண்டு வந்து சில திபெத்திய மாணவர்கள் அதிபருக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். இரு நாட்டு அதிபர்களையுமே இது அதிர்ச்சியடைய செய்தது. இத்தனைப் பாதுகாப்புகளையும் மீறி இவர்கள் எப்படி வந்தார்கள் என்று அப்போதே சீன அதிபருக்கு நெருக்கமானவர்கள் மோடியிடம் முறையிட,  அந்த கோபத்தை அப்படியே எடப்பாடியின் மீது திருப்பி விட்டாராம் மோடி!

ஒரு மாத காலமாக தூங்காமல் வேலைப் பார்த்து வந்த காவல்துறையினரிடம் விளக்கம் கேட்டு தனது கோபத்தை திசைதிருப்பியிருக்கிறாராம் எடப்பாடி. ஆனாலும் எடப்பாடி மீதான பிரதமரின் கோபம் இன்னமும் கட்டுக்கடங்காமல் இருக்கிறதாம். தனது ஆட்சி தான் நடக்கிறது என்று நம்பிக் கொண்டிருந்த மோடிக்கு இது அதிர்ச்சியளிக்க, அதிபருடனான சந்திப்பெல்லாம் முடிந்த பிறகு எடப்பாடிக்கு அதிர்ச்சியளிக்க நினைத்திருக்கிறாராம் மோடி… எடப்பாடியார் சொதப்பிய சந்தோஷத்தில் கூடவே நிழலாக சுற்றி வரும் துணைத்தலைவர் படு உற்சாகத்தில் அடுத்த கட்டத்திற்கு காய்களை நகர்த்த தொடங்கியிருக்கிறார். ’அம்மாவிடம் அரசியல் கற்றவர்கள் என்றால் சும்மாவா?’ என்று நக்கலாய் சிரிக்கிறார்கள் அதிமுகவினர்.