×

எடப்பாடியை சிக்க வைக்க குறி… பதற வைக்கும் பாஜகவின் பகீர் திட்டம்..!

சேலத்தில் தொடங்கி அருகே உள்ள விழுப்புரத்திலிருந்து அண்மையில் எடப்பாடி பயணம் மேற்கொண்ட அமெரிக்கா வரை இந்த விசாரணை போகிறது என்கிறார்கள். முக்கால்வாசி ஆட்சியை முடித்துவிட்ட எடப்பாடி கட்சி, அடுத்த தேர்தல் என்ற சிந்தனையில் இறங்கிவிட்டார். எதிர்க்கட்சிகளை மட்டுமல்ல தனக்கு இத்தனை நாள் பாதுகாப்பு அளித்து வரும் பாஜகவையும் அவர் சற்று கடுமையாகவே கையாண்டு வருகிறார். இந்த நிலையில்தான் முதல்வர் எடப்பாடியைச் சுற்றியிருப்பவர்களைப் பற்றி அனைத்து வித தகவல்களையும் கடந்த எட்டு நாட்களாக முழு வேகத்தில் திரட்ட ஆரம்பித்திருக்கிறது
 

சேலத்தில் தொடங்கி அருகே உள்ள விழுப்புரத்திலிருந்து அண்மையில் எடப்பாடி பயணம் மேற்கொண்ட அமெரிக்கா வரை இந்த விசாரணை போகிறது என்கிறார்கள்.

முக்கால்வாசி ஆட்சியை முடித்துவிட்ட எடப்பாடி  கட்சி, அடுத்த தேர்தல் என்ற சிந்தனையில் இறங்கிவிட்டார். எதிர்க்கட்சிகளை மட்டுமல்ல தனக்கு இத்தனை நாள் பாதுகாப்பு அளித்து வரும் பாஜகவையும் அவர் சற்று கடுமையாகவே கையாண்டு வருகிறார்.

 இந்த நிலையில்தான் முதல்வர் எடப்பாடியைச் சுற்றியிருப்பவர்களைப் பற்றி அனைத்து வித தகவல்களையும் கடந்த எட்டு நாட்களாக முழு வேகத்தில் திரட்ட ஆரம்பித்திருக்கிறது மத்திய உளவுத் துறை. இதில் முதல் ஆளாக இருப்பவர் தமிழ்நாட்டு தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவரான இளங்கோவன். எடப்பாடி பழனிசாமி அமைச்சராக ஆவதற்கு முன்பிருந்தே இளங்கோவனுடன் நெருக்கமான தொடர்புகொண்டவர். மிகப் பலர் இன்று வரையும் இளங்கோவனும் எடப்பாடியும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதில் தொடங்கி இருவரும் கடந்த சில பத்தாண்டுகளாகவே ஒன்றாகப் பயணித்து வந்த பாதையை முற்று முழுதாக விசாரித்து முடித்திருக்கிறது உளவுத் துறை.

சேலத்தில் போலீஸ் ஸ்டேஷன் முதல் எஸ்பி அலுவலகம் வரை இளங்கோவன் பேருக்கு அவ்வளவு செல்வாக்கு இருக்கிறது. பள்ளிகள் உட்பட பல இடங்களில் அவரே சென்று ஆய்வு செய்வதும், இலவச மடிக்கணினி வழங்கும் விழாக்களில் கலந்துகொள்வதும் என்று மாவட்டத்தில் முக்கிய பிரமுகராகவே கருதப்படுகிறார் இளங்கோவன்.

இப்படிப்பட்ட இளங்கோவனின் ஆரம்ப காலம் என்ன, அவர் எடப்பாடியோடு இணைந்து பயணிக்க ஆரம்பித்ததிலிருந்து அவருடைய வளர்ச்சி என்ன, வெளிநாடுகளில் சொத்துகள் இருக்கிறதா என்பது வரைக்கும் விசாரித்து ஒரு நீண்ட பட்டியலை எடுத்துவைத்திருக்கிறது மத்திய உளவுத் துறை. இதற்காக சில சிறப்பு அதிகாரிகளும் ஆஃப் த ரெக்கார்டாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இளங்கோவன் மட்டுமல்ல; அவர் போலவே எடப்பாடியோடு ஆரம்ப காலத்திலிருந்து பயணித்து வருபவர்களின் பொருளாதார வளர்ச்சி, செல்வாக்கு, வழக்கு, குற்றப் பின்னணி என்று விசாரித்து அதற்கென ஒரு தனி ஃபைல் ரெடி செய்யப்பட்டிருக்கிறது.

சேலத்தில் தொடங்கி அருகே உள்ள விழுப்புரத்திலிருந்து அண்மையில் எடப்பாடி பயணம் மேற்கொண்ட அமெரிக்கா வரை இந்த விசாரணை போகிறது என்கிறார்கள்.