×

எடப்பாடியின் அதிரடி அறிவிப்புகள்! – கதிகலங்கி நிற்கும் தி.மு.க

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத் தேர்வை அறிவித்த எடப்பாடி பழனிசாமி அரசு கடைசி நேரத்தில் அந்த உத்தரவைத் திரும்பப் பெற்றது. இதனால், இதுநாள் வரை எடப்பாடி மீது கோபத்திலிருந்த பெற்றோர் மனதில் எடப்பாடி ஹீரோவாகிவிட்டார். அடுத்ததாக பெட்ரோ கெமிக்கல் தொழிச்சாலை ஒன்று கடலூரில் அமைப்பதற்கான கூட்டத்தில் பங்கேற்றார். எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்புகள் வெளியிட்டு வருவதால் பிரஷாந்த் கிஷோர் வந்தும் கூட பிரயோஜனம் இல்லாமல் போய்விடுமோ என்று தி.மு.க-வினர் கலங்கி நிற்கின்றனர். ஐந்து மற்றும் எட்டாம்
 

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத் தேர்வை அறிவித்த எடப்பாடி பழனிசாமி அரசு கடைசி நேரத்தில் அந்த உத்தரவைத் திரும்பப் பெற்றது. இதனால், இதுநாள் வரை எடப்பாடி மீது கோபத்திலிருந்த பெற்றோர் மனதில் எடப்பாடி ஹீரோவாகிவிட்டார். 
அடுத்ததாக பெட்ரோ கெமிக்கல் தொழிச்சாலை ஒன்று கடலூரில் அமைப்பதற்கான கூட்டத்தில் பங்கேற்றார்.

எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்புகள் வெளியிட்டு வருவதால் பிரஷாந்த் கிஷோர் வந்தும் கூட பிரயோஜனம் இல்லாமல் போய்விடுமோ என்று தி.மு.க-வினர் கலங்கி நிற்கின்றனர்.

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத் தேர்வை அறிவித்த எடப்பாடி பழனிசாமி அரசு கடைசி நேரத்தில் அந்த உத்தரவைத் திரும்பப் பெற்றது. இதனால், இதுநாள் வரை எடப்பாடி மீது கோபத்திலிருந்த பெற்றோர் மனதில் எடப்பாடி ஹீரோவாகிவிட்டார். 
அடுத்ததாக பெட்ரோ கெமிக்கல் தொழிச்சாலை ஒன்று கடலூரில் அமைப்பதற்கான கூட்டத்தில் பங்கேற்றார். அடுத்த நாளே, கடலூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் சிறப்பு மண்டலம் அறிவித்தார். இப்படி அவராகவே ஒன்றை செய்வதும், பிறகு அதை மாற்றுவதுமான அதிரடி அறிவிப்புக்களை வெளியிட்டு மக்கள் மனதில் ஹீரோகாக கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
விரைவில் தமிழகத்துக்கு இரண்டாவது தலைநகரம் அமைக்கும் திட்டத்தை அறிவிக்க உள்ளதாகவும் பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து மக்களை கவர உள்ளதாகவும் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.

பிரஷாந்த் கிஷோர் தி.மு.க பக்கம் சென்றுவிட்ட கடுப்பில், தி.மு.க வகுக்கும் வியூகங்களை தவிடுபொடியாக்கும் வகையில் எடப்பாடி காய் நகர்த்தி வருகிறார் என்று அ.தி.மு.க தொண்டர்கள் உற்சாகமாக உள்ளனர். எடப்பாடியாரின் அதிரடிகள் அ.தி.மு.க-வை கரை சேர்த்துவிடும் என்று அவர்கள் நம்பிக்கையுடன் கூறிவருகின்றனர்.