×

எடப்பாடிக்கு எதிராக உள்ளடி வேலை… டி.டி.வி.தினகரனின் ரகசிய திட்டத்தால் உளவுத்துறை அதிர்ச்சி..!

பணத்தை கொடுத்து சாதித்து விடலாம் என அதிமுக கனவு கண்டிருந்த நிலையில் டி.டி.வி.தினகரனின் இந்த புதிய அசைண்மெண்ட் எடப்பாடி தரப்பை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடவே இல்லை. ஆனால் அப்படி இருந்தும் அமமுகவினர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள் என ரகசியமாக வீடு வீடாக சென்று டி.டி.வி.தினகரனின் அமமுக கட்சி ஆதரவாளர்கள் ரகசிய பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அதிமுக அதிர்ச்சி அடைந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் அமமுக வலுவாக
 

பணத்தை கொடுத்து சாதித்து விடலாம் என அதிமுக கனவு கண்டிருந்த நிலையில் டி.டி.வி.தினகரனின் இந்த புதிய அசைண்மெண்ட் எடப்பாடி தரப்பை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்த இடைத்தேர்தலில் போட்டியிடவே இல்லை. ஆனால் அப்படி இருந்தும் அமமுகவினர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

அதிமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள் என ரகசியமாக வீடு வீடாக சென்று  டி.டி.வி.தினகரனின்  அமமுக கட்சி ஆதரவாளர்கள் ரகசிய பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அதிமுக அதிர்ச்சி அடைந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அமமுக வலுவாக  இருந்தது. ஆனால் மக்களவை தேர்தல் தோல்வியால் அந்த கட்சி கலகலத்துப் போனது. இதனால் அமமுகவில் பலரும்  ஓட்டம் பிடித்து அதிமுகவில் ஐக்கியமானார்கள். டி.டி.வி.தினகரன்  நிரந்தர சின்னம் கிடைக்கும் வரை தேர்தல் அரசியல் வேண்டாம் என ஒதுங்கிக் கொண்டார். ஆனால் அதிமுகவுக்கு வாழ்வா..? சாவா..? என்கிற நிலையில் இந்த இடைத்தேர்தலில்  நாங்குநேரியில் ஆளுங்கட்சியை எப்படியாவது மண்ணை கவ்வச் செய்ய வேண்டும் என அமமுக திட்டம் போட்டுள்ளது.

இதனால், அமமுக போட்டியில்லை என்றாலும் பழைய பாசத்தில் அதிமுகவிற்கு ஓட்டுப் போட்டு விடாதீர்கள். அனைத்து  ஓட்டையும் நோட்டாவிற்கு மாற்றி விடுங்கள் என அமமுக தரப்பு ரகசிய சிக்னல் கொடுத்து உள்ளது.. நாங்குநேரியில் அமமுகவுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது.

இடைத்தேர்தலில் பணத்தை கொடுத்து சாதித்து விடலாம் என அதிமுக கனவு கண்டிருந்த நிலையில் டி.டி.வி.தினகரனின் இந்த புதிய அசைண்மெண்ட் எடப்பாடி தரப்பை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக உளவுத் துறையினர் ரகசிய தகவலை திரட்டி  வருகிறார்கள். ரகசிய பிரசாரம் செய்பவர்களை பணம் கொடுத்து மடக்குவது அல்லது அவர்கள் மீது வழக்கு தொடுத்து சிறையில் தள்ளுவது என்ற திட்டத்துடன் தேர்தல் நெருக்கத்தில் நடவடிக்கை எடுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.