×

ஊரடங்கு தளர்வு இல்லை என அரசு அறிவிப்பு… ராமதாஸ், அன்புமணி வரவேற்பு!

மத்திய அரசு ஏப்ரல் 20ம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகளை செய்துகொள்ளலாம் என்று அறிவித்திருந்தது. ஆனால், இது பற்றி தமிழக அரசு எந்த ஒரு முடிவையும் எடுக்காமலேயே இருந்தது. 20ம் தேதி ஆன நிலையில் இன்று தமிழக அரசு ஆலோசனை நடத்தியது ஊரடங்கு மே 3ம் தேதி வரை தளர்வு இல்லை என்று தமிழக அரசு முடிவு செய்திருப்பதற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மத்திய அரசு ஏப்ரல் 20ம்
 

மத்திய அரசு ஏப்ரல் 20ம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகளை செய்துகொள்ளலாம் என்று அறிவித்திருந்தது. ஆனால், இது பற்றி தமிழக அரசு எந்த ஒரு முடிவையும் எடுக்காமலேயே இருந்தது. 20ம் தேதி ஆன நிலையில் இன்று தமிழக அரசு ஆலோசனை நடத்தியது

ஊரடங்கு மே 3ம் தேதி வரை தளர்வு இல்லை என்று தமிழக அரசு முடிவு செய்திருப்பதற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு ஏப்ரல் 20ம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகளை செய்துகொள்ளலாம் என்று அறிவித்திருந்தது. ஆனால், இது பற்றி தமிழக அரசு எந்த ஒரு முடிவையும் எடுக்காமலேயே இருந்தது. 20ம் தேதி ஆன நிலையில் இன்று தமிழக அரசு ஆலோசனை நடத்தியது. அதில், மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்றும், ஊரடங்கில் சில தளர்வுகளை மேற்கொள்வது இல்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு பா.ம.க வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்படாது என்ற தமிழக அரசின் அறிவிப்பு சரியான நடவடிக்கை. இதைத் தான் இன்று காலையிலும் நான் வலியுறுத்தியிருந்தேன். இது தான் மக்கள் நலனுக்கு அவசியமானது. இதை மக்கள் உறுதியாக கடைப்பிடித்தால் கொரோனா பரவலில் இருந்து நிரந்தரமாக விடுதலை பெறலாம்!” என்று கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ம.க இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்வீடில், “தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்படாது; மே 3-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் தொடரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. கொரோனா பரவல் தடுப்பில் தமிழக அரசு சரியான பாதையில் செல்வதை இது காட்டுகிறது. மக்களும் ஒத்துழைக்க வேண்டும்!” என்று கூறியுள்ளார்.