×

ஊரடங்கில் தளர்வு அளிக்கலாமா… தமிழக அமைச்சரவை ஆலோசனை!

ஊரடங்கு கடந்த மார்ச் 24ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு மாதம் கடந்த நிலையில் சென்னையில் கொரோனா தற்போதுதான் தன்னுடைய கோர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. ஊரடங்கில் தளர்வு அளிப்பது பற்றி முக்கிய முடிவு எடுப்பதற்காக தமிழக அமைச்சரவை இன்று கூடியது. ஊரடங்கு கடந்த மார்ச் 24ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு மாதம் கடந்த நிலையில் சென்னையில் கொரோனா தற்போதுதான் தன்னுடைய கோர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் கொரோனா
 

ஊரடங்கு கடந்த மார்ச் 24ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு மாதம் கடந்த நிலையில் சென்னையில் கொரோனா தற்போதுதான் தன்னுடைய கோர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது.

ஊரடங்கில் தளர்வு அளிப்பது பற்றி முக்கிய முடிவு எடுப்பதற்காக தமிழக அமைச்சரவை இன்று கூடியது.
ஊரடங்கு கடந்த மார்ச் 24ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு மாதம் கடந்த நிலையில் சென்னையில் கொரோனா தற்போதுதான் தன்னுடைய கோர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்தாலும், உண்மையில் ஆய்வுகள் அதிகமாக நடக்கும்போதுதான் பாதிப்பு உள்ளதா இல்லையா என்பது தெரியவரும்.

இந்த நிலையில் ஊரடங்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் பச்சை, ஆரஞ்சு மண்டலங்களில் சில தளர்வுகளை அளிக்க பரிந்துரைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் ஆரஞ்சு மண்டலத்தில் தளர்வு அளிப்பது பற்றி ஆலோசிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடியது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. கூட்டத்துக்குப் பிறகே, எந்த மாவட்டத்துக்கு எல்லாம் என்ன மாதிரியான தளர்வு கிடைக்கும் என்பது தெரியவரும்.