×

உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்? : ஓ.பி.எஸ் பதில்

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படாமல் இருக்கும் உள்ளாட்சித் தேர்தலை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படாமல் இருக்கும் உள்ளாட்சித் தேர்தலை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் நெருக்கடியாலும், நீதி மன்ற உத்தரவாலும் உள்ளாட்சித் தேர்தலைத் தமிழக அரசு நடத்தியே ஆக வேண்டும் என்ற சூழல் நிலவுகிறது. உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளில்
 

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படாமல் இருக்கும் உள்ளாட்சித் தேர்தலை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படாமல் இருக்கும் உள்ளாட்சித் தேர்தலை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் நெருக்கடியாலும், நீதி மன்ற உத்தரவாலும் உள்ளாட்சித் தேர்தலைத் தமிழக அரசு நடத்தியே ஆக வேண்டும் என்ற சூழல் நிலவுகிறது. உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. 

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகள் முக்கியமான பகுதிகளில் மேயர் பதவிகளைக் கேட்டு வருகின்றன. இது, திமுக மற்றும் அதிமுக தலைமையிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மேயர் பதவிக்கு மட்டும் மறைமுக தேர்தல் நடத்தப் போவதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன. மறைமுக தேர்தல் நடத்துவது குறித்து நேற்று தலைமைச் செயலகத்தில் அதிமுக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

இது குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட வில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவின் அடித்தளம் பலமாக இருப்பதால் ரஜினி கமல் இணைந்தாலும் அது அதிமுகவுக்கு எந்த பின்னடைவையும் ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளார்.