×

உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தது செல்லாது! – உயர் நீதிமன்றம் அதிரடி 

சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சிக்கு நடந்த தேர்தலில் அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் என இரண்டு கட்சியைச் சேர்ந்தவர்களும் வெற்றி பெற்றதாக அதிகாரிகள் சான்றிதழ் வழங்கிய வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சிக்கு நடந்த தேர்தலில் அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் என இரண்டு கட்சியைச் சேர்ந்தவர்களும் வெற்றி பெற்றதாக அதிகாரிகள் சான்றிதழ் வழங்கிய வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சிறிது நேரத்தில்
 

சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சிக்கு நடந்த தேர்தலில் அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் என இரண்டு கட்சியைச் சேர்ந்தவர்களும் வெற்றி பெற்றதாக அதிகாரிகள் சான்றிதழ் வழங்கிய வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சிக்கு நடந்த தேர்தலில் அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் என இரண்டு கட்சியைச் சேர்ந்தவர்களும் வெற்றி பெற்றதாக அதிகாரிகள் சான்றிதழ் வழங்கிய வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த பிரியதர்ஷினி வெற்றி பெற்றார் என்று சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால் இரண்டு பேரும் தாங்கள்தான் ஊராட்சித் தலைவர் என்று போட்டிப்போட்டனர்.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது. 
வழக்கை நீதிபதிகள் துரைசாமி ரவீந்திரன் அமர்வு விசாரித்தது. இதில். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டவர் வெற்றி பெற்றது உறுதியானது. இதன் அடிப்படையில் அ.தி.மு.க வேட்பாளர் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவித்தது செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் முறைகேடு செய்தே அ.தி.மு.க வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதை உறுதி செய்யும் வகையில் இந்த தீர்ப்பு உள்ளது.