×

உயிரற்ற பட்டேல் சிலைக்கு 3000 கோடி; கஜாவால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு 350 கோடியா? கனிமொழி பாய்ச்சல்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மத்திய அரசு முறையாக நிவாரணம் வழங்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மத்திய அரசு முறையாக நிவாரணம் வழங்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். கஜா புயல் பாதித்த தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நிதியுதவி செய்வதாக தமிழக அரசியல் தலைவர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். டெல்டா மாவட்ட மக்களும், தங்களுக்கான நிவாரண உதவிகள் முழுமையாக வந்தடையவில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, நிவாரண உதவிகளை
 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மத்திய அரசு முறையாக நிவாரணம் வழங்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மத்திய அரசு முறையாக நிவாரணம் வழங்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

கஜா புயல் பாதித்த தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நிதியுதவி செய்வதாக தமிழக அரசியல் தலைவர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். டெல்டா மாவட்ட மக்களும், தங்களுக்கான நிவாரண உதவிகள் முழுமையாக வந்தடையவில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, நிவாரண உதவிகளை மத்திய அரசிடம் முறையிட்டு பெற்றுத் தர வேண்டிய இடத்தில் இருக்கும் ஆளுங்கட்சியோ, தங்களின் பதவியை காப்பாற்றிக் கொள்வதில் குறியாக இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தன் ட்விட்டர் பக்கத்தில், “உயிரற்ற பட்டேல் சிலைக்கு 3000 கோடியாம், உயிர்வாழத் துடிக்கும் கஜா புயல் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட  தமிழர்களுக்கு 350 கோடியாம்!” என காட்டமாக பதிவு செய்துள்ளார்.