×

உயர்ந்துள்ள மக்கள் ஆதரவு: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவரா? பிரபல தொலைக்காட்சியின் சர்வே முடிவு!

தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்ற தலைப்பில் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய கணக்கெடுப்பில் மு.க. ஸ்டாலின் முதலிடத்தைப் பெற்றுள்ளார். சென்னை: தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்ற தலைப்பில் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய கணக்கெடுப்பில் மு.க. ஸ்டாலின் முதலிடத்தைப் பெற்றுள்ளார். தமிழக அரசியல் களம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நிச்சயமற்று காணப்படுகிறது. அமைப்பு பலம், வாக்கு வங்கி பலத்தில் தி.மு.க இன்றுள்ள நிலையில் முன்னணியில் உள்ளது. 2016 சட்டசபை தேர்தலில் அ,தி.மு.க. எதிர்ப்பு வாக்குகள் தி.மு.கவுக்கே
 

தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்ற தலைப்பில் பிரபல தனியார் தொலைக்காட்சி  நடத்திய கணக்கெடுப்பில் மு.க. ஸ்டாலின் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

சென்னை: தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்ற தலைப்பில் பிரபல தனியார் தொலைக்காட்சி  நடத்திய கணக்கெடுப்பில் மு.க. ஸ்டாலின் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

தமிழக அரசியல் களம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நிச்சயமற்று காணப்படுகிறது. அமைப்பு பலம், வாக்கு வங்கி பலத்தில் தி.மு.க இன்றுள்ள நிலையில் முன்னணியில் உள்ளது. 2016 சட்டசபை தேர்தலில் அ,தி.மு.க. எதிர்ப்பு வாக்குகள் தி.மு.கவுக்கே அதிகம் கிடைத்தன. இப்போது ரஜினிகாந்த், கமல் ஹாசன் அரசியல் பிரவேசம் முடிவாகிவிட்டது.இந்த நிலையில் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் எங்கே போகும்? அப்படிப் பார்க்கும்போது, ஊசலாடும் அல்லது அலைபாயும் மக்கள் வாக்குகள் தாறுமாறாக பிரிய வாய்ப்புள்ளது என்றே தோன்றுகிறது.

இந்நிலையில்  தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற பிரபல தனியார் தொலைக்காட்சி  நடத்திய கணக்கெடுப்பில்  திமுக தலைவர் ஸ்டாலினுக்கு 48% சதவீதம்  ஆதரவு கிடைத்துள்ளது. அடுத்ததாக 20% சதவீதம் ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர் செல்வமும் உள்ளனர்.  இன்று சட்டமன்ற தேர்தல் நடந்தால் உங்கள் ஓட்டு யாருக்கு? என்ற கேள்விக்கு, திமுகவிற்கு 38% சதவீதமும், அதிமுகவுக்கு 21% சதவீதமும், அமமுக 9% சதவீதமும், பாமக 5% சதவீதமும்,நாம் தமிழர் 3% சதவீதமும் மக்கள் வாக்களித்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் நடந்த இந்த கணக்கெடுப்பில்,அதிமுகவுக்கு  25% சதவீதமாக இருந்த மக்கள் செல்வாக்கு தற்போது 21% சதவீதமாக குறைந்துள்ளது.

அதே போல் திமுகவுக்கு 41% சதவீதமாக இருந்த மக்கள் ஆதரவு, 43% சதவீதமாக உயர்ந்துள்ளது.