×

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி போல நடித்து பணம் வாங்கிய திமுக பிரமுகர் கைது !

இவரின் கடைக்கு சில நாட்களுக்கு முன்னர் வந்த இரண்டு பேர் தாங்கள் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி என்றும் உங்கள் கடையில் சோதனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். தண்டையார்பேட்டை, தாண்டவராயன் தெருவில் மாடசாமி(50) என்பவர் டீக்கடை ஒன்று நடத்தி வருகிறார். இவரின் கடைக்கு சில நாட்களுக்கு முன்னர் வந்த இரண்டு பேர் தாங்கள் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி என்றும் உங்கள் கடையில் சோதனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அதற்கு மாடசாமி ஒப்புக்கொண்டதால் அவர்கள்
 

இவரின் கடைக்கு சில நாட்களுக்கு முன்னர் வந்த இரண்டு பேர் தாங்கள் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி என்றும் உங்கள் கடையில் சோதனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

தண்டையார்பேட்டை, தாண்டவராயன் தெருவில் மாடசாமி(50) என்பவர்  டீக்கடை ஒன்று  நடத்தி வருகிறார். இவரின் கடைக்கு சில நாட்களுக்கு முன்னர் வந்த இரண்டு பேர் தாங்கள் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி என்றும் உங்கள் கடையில் சோதனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அதற்கு  மாடசாமி ஒப்புக்கொண்டதால் அவர்கள் இரண்டு பேரும் கடையின் உள்ளே சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள், உங்கள் கடையில் வீட்டுக்குப் பயன்படுத்தும் சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது என்றும் கலப்பட டீத்தூள்  பயப்படுத்தப்படுகிறது என்று கூறி மாமூல் கேட்டுள்ளனர். இதனால் பயந்து போன மாடசாமி அவர்களுக்குப் பணம் கொடுத்து அனுப்பி வைத்துள்ளார். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணைய தளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ வைரல் ஆனது. 

அந்த வீடியோவை பார்த்த தண்டையார்பேட்டை போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் மாநகராட்சி பாதுகாப்புத் துறை அதிகாரி என்று கூறிய பணம் பறித்த நபர் திமுக உறுப்பினர் என்றும் அவர் பெயர் ரமேஷ்(45) என்றும் தெரிய வந்துள்ளது. பின்னர் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது தானும் ஜோசப் ஒத்தேனியா என்ற நபரும் சேர்ந்து தான் பல கடைகளில் இதே போல லஞ்சம் வாங்கினோம் என்று ரமேஷ் ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து ரமேஷை கைது செய்த போலீசார்,  ஜோசப்பை தேடி வருகின்றனர்.