×

இம்ரான் கான் பதவியேற்பு விழாவுக்கு செல்ல அரசு பணத்தை செலவு செய்த சித்து…….. வெளுத்து வாங்கும் பா.ஜ.க.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க நவ்ஜோத் சிங் சித்து அரசு பணத்தை செலவிட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனையடுத்து சித்துவை பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடைபெற்ற அந்நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக் இன்சாப் கட்சி வெற்றி பெற்றது. இதனையடுத்து இம்ரான் கான் அந்நாட்டு பிரதமராக பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு தனிப்பட்ட முறையில் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் எம்.எல்.ஏ.வுமான நவ்ஜோத்
 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க நவ்ஜோத் சிங் சித்து அரசு பணத்தை செலவிட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனையடுத்து சித்துவை பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடைபெற்ற அந்நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக் இன்சாப் கட்சி வெற்றி பெற்றது. இதனையடுத்து இம்ரான் கான் அந்நாட்டு பிரதமராக பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு தனிப்பட்ட முறையில் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் எம்.எல்.ஏ.வுமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று சித்துவும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு திரும்பினார்.

இந்நிலையில் இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அரசு பணத்தை சித்து செலவிட்ட விஷயம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் வெளியாகியுள்ளது. தனிப்பட்ட பயணத்துக்கு அரசு பணத்தை சித்து செலவிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆனால் சித்து அரசு பணத்தை செலவிடவில்லை தனது சொந்த செலவில்தான் பாகிஸ்தான் சென்று வந்தார் என சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சித்து தெரிவித்தார்.

சொந்த பயணத்துக்கு அரசு பணத்தை சித்து செலவிட்டது குறித்து பஞ்சாப் பா.ஜ.க. தலைவர் மன்ஜித் சிங் சிர்சா கூறுகையில், சித்து, தேசத்திடம் பொய் சொன்னது மற்றும் அரசு கஜானாவிலிருந்து பணத்தை செலவிட்டது அவகாரமான விஷயம் என தெரிவித்தார். இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட சித்து அந்நாட்டு ராணுவ தளபதியை கட்டி பிடித்த விவகாரம் நம் நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.