×

இப்படியொரு காரியத்தை வேலுமணி செய்யலாமா..? எடப்பாடி பயங்கர அப்செட்..!

அதுக்கு எதுக்கு நான் இந்த ஆட்சி நாற்காலியில் உட்காரணும் என தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி இருக்கிறார் எடப்பாடி. தண்ணீர் பஞ்சம் குறித்து உள்ளாட்சி துறையில் மீட்டிங் போட்டு அதிகாரிகளிடம் தகவல்களை வாங்கி வர வேண்டும் என்றுதான் குடிநீர் தொடர்பான மீட்டிங்கில் அமைச்சர் வேலுமணி பங்கேற்றார். அவர் அளிக்கப்போகும் தகவல்களை வைத்தே எடப்பாடி பழனிசாமி தண்ணீர் பஞ்சத்தில் எதிர்க்கட்சிகளை ஒரு பிடி பிடிக்க நினைத்து இருந்தார். அதற்காக பிரஸ் மீட் ஏற்பாடு செய்யப்பட்டு தயாராக இருந்தது. அதற்குள் மீடியாக்களில்
 

அதுக்கு எதுக்கு நான் இந்த ஆட்சி நாற்காலியில் உட்காரணும் என தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி இருக்கிறார் எடப்பாடி.

தண்ணீர் பஞ்சம் குறித்து உள்ளாட்சி துறையில் மீட்டிங் போட்டு அதிகாரிகளிடம் தகவல்களை வாங்கி வர வேண்டும் என்றுதான் குடிநீர் தொடர்பான மீட்டிங்கில் அமைச்சர் வேலுமணி பங்கேற்றார். அவர் அளிக்கப்போகும் தகவல்களை வைத்தே எடப்பாடி பழனிசாமி தண்ணீர் பஞ்சத்தில் எதிர்க்கட்சிகளை ஒரு பிடி பிடிக்க நினைத்து இருந்தார். 

அதற்காக பிரஸ் மீட் ஏற்பாடு செய்யப்பட்டு தயாராக இருந்தது. அதற்குள் மீடியாக்களில் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமே இல்லை என்று அமைச்சர் வேலுமணி பேட்டி அளிப்பதாக எடப்பாடி பழனிசாமிக்கு தகவல் சென்றது. இதனால் கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராம். ஆட்சி அதிகாரத்தில் வேலுமணியின் பங்களிப்பை மறக்க முடியாது. இன்னும் ஆட்சியை தாங்கி பிடிப்பதில் முக்கிய நபராக இருக்கிறார். 

இருந்தாலும் தேசிய அளவில் தமிழக தண்ணீர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அதை நான் சொன்னால் தானே நன்றாக இருக்கும். என்னை தவிர எல்லா அமைச்சர்களும் என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் பேட்டி கொடுத்து விடுகின்றனர்.

 அதன் பிறகே சில தகவல்கள் எனக்கு தெரிய வருகிறது. அதுக்கு எதுக்கு நான் இந்த ஆட்சி நாற்காலியில் உட்காரணும் என தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி இருக்கிறார் எடப்பாடி. அதன் பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பை நிறுத்தி விட்டார் எடப்பாடி பழனிசாமி.