×

“இன்றுமுதல் #PKStalin என்று அன்போடு அழைக்கப்படுவாய்”; ” திமுகவில் ஒரு “பிகாரி” தலைமை” : இணையத்தில் வைரலாகும் ட்ரோல்ஸ்!

எப்படி வாக்கு வாங்கலாம், என்ன மாதிரியான திட்டங்களை வகுக்கலாம் என்பதை தெள்ள தெளிவாக பிளான் போட்டு தருகிறது. 2021 சட்டசபை தேர்தலுக்காக பிரசாந்த் கிஷோருடன் கைகோர்த்துள்ளது திமுக. ’ஐபேக்’ அதாவது “இந்தியன் பொலிட்டிக்கல் ஆக்சன் கமிட்டி” நிறுவனத்தின் பிரஷாந்த் கிஷோர் ஆலோசனைகள் படி செயல்பட்டு பிரதமர் மோடி முதல் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வரை ஆட்சியை பிடித்துள்ளனர். காரணம் கார்ப்ரேட் நிறுவனங்கள் மக்களை நேரடியாக சந்தித்து எப்படி வாக்கு வாங்கலாம், என்ன மாதிரியான திட்டங்களை
 

எப்படி வாக்கு வாங்கலாம், என்ன மாதிரியான திட்டங்களை வகுக்கலாம் என்பதை தெள்ள தெளிவாக பிளான் போட்டு தருகிறது.

2021 சட்டசபை தேர்தலுக்காக பிரசாந்த் கிஷோருடன் கைகோர்த்துள்ளது திமுக.  ’ஐபேக்’ அதாவது “இந்தியன் பொலிட்டிக்கல் ஆக்சன் கமிட்டி” நிறுவனத்தின் பிரஷாந்த் கிஷோர் ஆலோசனைகள் படி செயல்பட்டு பிரதமர் மோடி முதல் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வரை  ஆட்சியை பிடித்துள்ளனர். காரணம்  கார்ப்ரேட் நிறுவனங்கள் மக்களை நேரடியாக சந்தித்து எப்படி வாக்கு வாங்கலாம், என்ன மாதிரியான திட்டங்களை வகுக்கலாம் என்பதை தெள்ள தெளிவாக பிளான் போட்டு தருகிறது.

 

அந்த வகையில்  நீண்ட நாட்களாக அரசியலில் ஈடுபட்டு வரும் மு.க.ஸ்டாலினின்  முதல்வர் கனவு வெறும் கனவாக உள்ளது.  இதனால் 2021 சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடித்து விடவேண்டும் என்ற நோக்கத்தில் வியூகம் வகுத்துள்ள திமுக பிரஷாந்த் கிஷோரை  நாடியுள்ளது.  இதை சற்றும் எதிர்பார்க்காத மற்ற கட்சியினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

அதே சமயம் திமுக  பிரஷாந்த் கிஷோருடன் இணைந்துள்ளது குறித்து கடுமையான  விமர்சனங்களும் எழுந்துள்ளன.

அதாவது இதுகுறித்து வெளியாகியுள்ள ட்ரோலில், “திராவிட முன்னேற்ற கழக தலைமையில் வெற்றிடம் உள்ளதால் ஒரு “பிகாரி”தலைமை ஏற்றார்.

 

 

 

இனி #MKStalin … #PKStalin என்றே அழைக்கப்படுவார்.    #என்னகொடுமைதுரைமுருகன்இது” என்று கண்டமேனிக்கு விமர்சித்து வருகிறார்கள்.