×

ஆபாச படம் பார்த்தவருக்கு துணை முதலமைச்சர் பதவி! கர்நாடக கலேபரம் 

கர்நாடக சட்டமன்றத்தில் அமர்ந்து ஆபாச படம் பார்த்தவரை அம்மாநில துணை முதல்வராக அறிவித்துள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சட்டமன்றத்தில் அமர்ந்து ஆபாச படம் பார்த்தவரை அம்மாநில துணை முதல்வராக அறிவித்துள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2012-ல் பா.ஜ.க. அமைச்சர்களாக இருந்த லக்ஷ்மன் சங்கப்ப சவாடி கிருஷ்ணா பலேமர், சிசி பாட்டீல் ஆகியோர் சட்டமன்ற கூட்டத்தின் போதே ஆபாச படம் பார்த்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில்
 

கர்நாடக சட்டமன்றத்தில் அமர்ந்து ஆபாச படம் பார்த்தவரை அம்மாநில துணை முதல்வராக அறிவித்துள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக சட்டமன்றத்தில் அமர்ந்து ஆபாச படம் பார்த்தவரை அம்மாநில துணை முதல்வராக அறிவித்துள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2012-ல் பா.ஜ.க. அமைச்சர்களாக இருந்த  லக்ஷ்மன் சங்கப்ப சவாடி கிருஷ்ணா பலேமர், சிசி பாட்டீல் ஆகியோர் சட்டமன்ற கூட்டத்தின் போதே  ஆபாச படம் பார்த்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி  இருந்தது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தனது புதிய அமைச்சரவை பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்தப் பட்டியலில் 3 துணை முதல்வர்கள் இடம் பெற்றுள்ளனர். கோவிந்த் மக்தப்பா கராஜோல், டாக்டர். சி.என்.அஸ்வத் நாராயண், லக்ஷ்மன் சங்கப்ப சவாடி ஆகிய 3 பேர் துணை முதல்வர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மூன்று துணை முதல்வர்களில் ஒருவரான கோவிந்த் மக்தப்பா கராஜோலுக்கு சமூக நலத்துறை மற்றும் பொதுப்பணித் துறையும், டாக்டர் அஸ்வத் நாராயணுக்கு உயர்கல்வித் துறை, தகவல் தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் லக்ஷ்மன் சங்கப்ப சவாடி என்பவர் ஏற்கனவே ஆபாச வீடியோ பார்த்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்நிலையில் சர்ச்சையில் சிக்கிய ஒருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கியிருப்பது மற்ற அரசியல் கட்சி தலைவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.