×

ஆந்திர தலைநகர் அமராவதி அமையாமலேயே போய்விட்டது!

உலக வங்கி தருவதாகச் சொல்லி இருந்த 2000 கோடி தருவதற்கு இல்லையாம். “அத்தைக்கு அவசரமா ஆப்பரேஷன் பண்றதால, காசு செலவாகிடுச்சு மச்சி, சாரி” என அசால்ட்டாக சொல்லி ஒதுங்கிவிட்டது உலக வங்கி. கட்டுனா அமராவதியிலதான் தலைநகரை கட்டுவேன் என அடம்பிடித்து ஆயிரக்கணக்கான கோடிகள் பட்ஜெட் போட்டு, பணத்திற்காக காத்திருந்தார் சந்திரபாபு நாயுடு. பாகுபலி இயக்குநரை அழைத்து ப்ளான் டிசைன் எல்லாம் கேட்டிருந்தார். ஆனா ஃபண்டு? மத்திய அரசிடம் இருந்து கோடிகளை இறக்கிவிடலாம் என காத்திருந்து காத்திருந்து நாயுடுவுக்கு
 

உலக வங்கி தருவதாகச் சொல்லி இருந்த 2000 கோடி தருவதற்கு இல்லையாம். “அத்தைக்கு அவசரமா ஆப்பரேஷன் பண்றதால, காசு செலவாகிடுச்சு மச்சி, சாரி” என அசால்ட்டாக சொல்லி ஒதுங்கிவிட்டது உலக வங்கி.

கட்டுனா அமராவதியிலதான் தலைநகரை கட்டுவேன் என அடம்பிடித்து ஆயிரக்கணக்கான கோடிகள் பட்ஜெட் போட்டு, பணத்திற்காக காத்திருந்தார் சந்திரபாபு நாயுடு. பாகுபலி இயக்குநரை அழைத்து ப்ளான் டிசைன் எல்லாம் கேட்டிருந்தார். ஆனா ஃபண்டு? மத்திய அரசிடம் இருந்து கோடிகளை இறக்கிவிடலாம் என காத்திருந்து காத்திருந்து நாயுடுவுக்கு கண்கள் பூத்துபோனது. ஆஹா, நம்மள வச்சி காமெடி பண்ணிகிட்டு இருக்காய்ங்க பாஜககாரய்ங்க என லேட்டாக உணர்ந்த நாயுடு, கூட்டணியிலிருந்தும் வெளியேறினார். உலக வங்கி தன் பங்குக்கு தோராயமாக 2000 கோடி ரூபாய் தருவதாக சொல்லியிருந்தது.  சரி அதைவச்சு அஸ்திவாரம் தோண்டிடலாம் என நாயுடி நினைத்திருக்கும்போது, ஆட்சியை அஸ்திவாரத்தோடு பெயர்த்தெடுத்து வீசிவிட்டார்கள் வாக்காளர்கள்.

ஜெகனமோகன் முதலமைச்சரானதும், தலைநகரமா? அமராவதியிலா? அங்கேயேதான் அமைக்கணுமா, ஏன் இந்த ஈரோடு பக்கம் தூத்துக்குடி பக்கம் தலைநகர் இருந்தா வேணாமா என அதிகாரிகளிடம் கேட்க, தலைநகர் அமராவதி கனவு அஸ்தமனமாகிவிட்டது என்பது புரிய தொடங்கிவிட்டது. இப்போது லேட்டஸ்ட் தகவல், உலக வங்கி தருவதாகச் சொல்லி இருந்த 2000 கோடி தருவதற்கு இல்லையாம். “அத்தைக்கு அவசரமா ஆப்பரேஷன் பண்றதால, காசு செலவாகிடுச்சு மச்சி, சாரி” என அசால்ட்டாக சொல்லி ஒதுங்கிவிட்டது உலக வங்கி. ஜெகன்மோகனிடம் கேட்டால், “சந்திரபாபு ஆட்சிக்காலத்தில் நடந்த தில்லுமுல்லுகளை எல்லாம் நாங்கள் விசாரிக்க அனுமதிக்க வேண்டும், அதன்பின்னர்தான் டிடி ரிலீஸ் பண்ணுவோம் என உலக வங்கி அதிகாரிகள் கேட்டார்கள், எங்கள் வீட்டுக்குள் உங்களை அனுமதிக்க முடியாது என சொல்லி நிராகரித்துவிட்டோம், எனவே, உலக வங்கி பின்வாங்கியதற்கு நாயுடுவே காரணம்” என சொல்லி அமர்ந்துவிட்டார். நாயுடு என்ன சொல்லி சமாளிக்கப் போறாரோ?