×

அரசுக்கு பல லட்சம் ரூபாய் பாக்கி ! துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு அரசியல்வாதிகள் பணம் தருவதில்லை !

உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாதுகாப்பு அளிக்குமாறு கேட்கும் முக்கிய பிரமுகர்கள் அதற்காக அரசுக்கு செலுத்த வேண்டிய பணத்தை முறையாக செலுத்துவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாதுகாப்பு அளிக்குமாறு கேட்கும் முக்கிய பிரமுகர்கள் அதற்காக அரசுக்கு செலுத்த வேண்டிய பணத்தை முறையாக செலுத்துவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அரசுக்கு சேரவேண்டிய பல லட்சம் ரூபாய் வரவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் அச்சுறுத்தல் காரணமாக முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள் தங்களுக்கு துப்பாக்கி
 

உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாதுகாப்பு அளிக்குமாறு கேட்கும் முக்கிய பிரமுகர்கள் அதற்காக அரசுக்கு செலுத்த வேண்டிய பணத்தை முறையாக செலுத்துவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாதுகாப்பு அளிக்குமாறு கேட்கும் முக்கிய பிரமுகர்கள் அதற்காக அரசுக்கு செலுத்த வேண்டிய பணத்தை முறையாக செலுத்துவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அரசுக்கு சேரவேண்டிய பல லட்சம் ரூபாய் வரவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

உத்தர பிரதேச மாநிலத்தில் அச்சுறுத்தல் காரணமாக முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள் தங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசாரை பாதுகாப்புக்கு வைத்துள்ளனர். பொதுவாக ஒருவர் துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் வந்தாலே அவருக்கு என ஒரு தனி மரியாதைதான். துப்பாக்கி வைத்திருக்கும் பாதுகாவலர்களின் எண்ணிக்கையை பொறுத்து பிரதான பிரமுகர்களுக்கு பொது இடங்களில் முக்கியத்துவம் கிடைப்பதும் வழக்கம்.

அரசு பொறுப்பில் இருக்கும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கமே அந்த செலவை ஏற்றுக் கொண்டு துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பு வழங்குகிறது. கூடுதல் பாது காப்பு வேண்டுமானால் அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் பதவியில் இல்லாத அரசியல்வாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு வழங்கு மாறு கோர முடியும்.
ஆனால் அப்படி பாதுகாவலர் வசதி பெறும் ஆளும் கட்சி அரசியல்வாதிகளில் பலர் உரிய கட்டணத்தை அரசுக்கு செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்படி பல லட்சம் ரூபாய் பாக்கி வைத்திருப்பவர்களை கணக்கெடுத்து நிலுவைத் தொகையை வசூலிக்க அரசு முடிவு செய்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் மட்டும் அங்குள்ள விஐபிகள் ரூ.30 லட்சம் பாக்கி வைத்துள்ளளதாகவும், இதேபோல பல் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விஐபிகளும் கட்டண பாக்கி வைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதில் பாஜகவினர் முதலிடத்திலும் சமாஜ்வாதி கட்சி யினர் 2-ம் இடத்திலும் உள்ள நிலையில் முன்னாள் எம்பி, எம்எல்ஏ, கட்சியின் மாவட்ட நிர்வாகி கள் தங்கள் பலத்தைக் காட்டுவதற்காக, தாங் கள் செல்லும் இடங்களுக்கும் பாதுகாவலர்களை அழைத்து செல்கிறார்கள்.