×

அரசு பேருந்துகளை திடீரென வழிமறித்து சோதனை செய்த அமைச்சர் !

போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கரூர் அருகே அரசு பேருந்துகளை திடீரென நிறுத்தி ஆய்வு மேற்கொண்டுள்ளார். அரசு பேருந்துகள் முறையாகச் செயல்படுவதில்லை என்றும் பேருந்துகளில் வசதி குறைவாக இருப்பதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக மழைக் காலங்களில் அரசு பேருந்துகளில் மேற்கூரை சேதமடைந்து மழைநீர் பேருந்தின் உள்ளே வரும் சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன. இந்நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கரூர் அருகே அரசு பேருந்துகளை திடீரென நிறுத்தி ஆய்வு மேற்கொண்டுள்ளார். கரூர் மாவட்டத்தில் நிகழ்ச்சி
 

போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கரூர் அருகே அரசு பேருந்துகளை திடீரென நிறுத்தி ஆய்வு மேற்கொண்டுள்ளார். 

அரசு பேருந்துகள் முறையாகச் செயல்படுவதில்லை என்றும் பேருந்துகளில் வசதி குறைவாக இருப்பதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக மழைக் காலங்களில் அரசு பேருந்துகளில் மேற்கூரை சேதமடைந்து மழைநீர் பேருந்தின் உள்ளே வரும் சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன. இந்நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கரூர் அருகே அரசு பேருந்துகளை திடீரென நிறுத்தி ஆய்வு மேற்கொண்டுள்ளார். 

கரூர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர் செல்லும் வழியில் கரைப்பாளையும் பேருந்து நிலையம் அருகே திடீரென காரை நிறுத்த சொல்லி கீழே இறங்கியுள்ளார்.

அப்போது, கரூர் – கோவை சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்துகளை நிறுத்தி ஆய்வு செய்துள்ளார். அதே போல, கோவையிலிருந்து திருச்சிக்குச் செல்லும்  அரசு குளிர்சாதன விரைவு பேருந்தையும் நிறுத்தி, ஆய்வு மேற்கொண்டார். அதுமட்டுமில்லாமல், வசதி போதுமானதாக உள்ளதா? ஏதேனும் குறை உள்ளதா? என்று பேருந்தில் பயணம் செய்தவர்களிடம் கேட்டறிந்தார். இது பயணிகளிடைய பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியது.