×

அரசியலில் இறங்குகிறார் சூர்யா..? வலிக்காமல் வதம் செய்ய அதிரடி எண்ட்ரி..!

‘நான் பேசித்தான் மோடிக்குக் கேட்க வேண்டும் என்பதில்லை. சூர்யா பேசியதே மோடிக்குக் கேட்டுவிட்டது’ என ரஜினியும் தன் பங்கிற்குக் கொளுத்திப் போட இந்த விவகாரம் இன்னும் சூடுபிடிக்கத் தொடங்கியது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகக் குரல் கொடுத்த நொடியிலிருந்தே ‘அடுத்த அரசியல் எண்ட்ரி சூர்யாவா’ என்ற பேச்சு பல இடங்களிலும் எதிரொலித்தது. அப்போதே ‘நான் பேசித்தான் மோடிக்குக் கேட்க வேண்டும் என்பதில்லை. சூர்யா பேசியதே மோடிக்குக் கேட்டுவிட்டது’ என ரஜினியும் தன் பங்கிற்குக் கொளுத்திப்
 

‘நான் பேசித்தான் மோடிக்குக் கேட்க வேண்டும் என்பதில்லை. சூர்யா பேசியதே மோடிக்குக் கேட்டுவிட்டது’ என ரஜினியும் தன் பங்கிற்குக் கொளுத்திப் போட இந்த விவகாரம் இன்னும் சூடுபிடிக்கத் தொடங்கியது.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகக் குரல் கொடுத்த நொடியிலிருந்தே ‘அடுத்த அரசியல் எண்ட்ரி சூர்யாவா’ என்ற பேச்சு பல இடங்களிலும் எதிரொலித்தது.

அப்போதே ‘நான் பேசித்தான் மோடிக்குக் கேட்க வேண்டும் என்பதில்லை. சூர்யா பேசியதே மோடிக்குக் கேட்டுவிட்டது’ என ரஜினியும் தன் பங்கிற்குக் கொளுத்திப் போட இந்த விவகாரம் இன்னும் சூடுபிடிக்கத் தொடங்கியது. இந்தநிலையில் விரைவில் ரிலீசாக இருக்கும் சூர்யாவின் ‘காப்பான்’ படத்தில் அரசியல் நெடி அதிகமாக இருக்கும் என செய்திகள் றெக்கைக் கட்டிப் பறக்கின்றன.

இது பற்றி ‘காப்பான்’ படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த், ’காப்பான்’ உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவானதுதான். நமது தேசியப் பாதுகாப்புப் படையின் அங்கமான சிறப்புப் பாதுகாப்புக் குழுவைப் பற்றிய ஆராய்ச்சியின் போது திரட்டப்பட்ட தகவல்கள், கதைகள் என்னை ஆச்சரியப்படுத்தின. இதை வைத்து ஏன் படம் எடுக்கக்கூடாது என்று நினைத்தேன்.

பிரதமருக்குப் பக்கத்திலிருந்து பாதுகாப்பு வழங்குபவர்கள் இவர்கள். குண்டடிபட சம்பளம் பெறுபவர்கள். இவர்களுக்குள் ஒரு ஒற்றன் இருந்து, அவன் பிரதமரைக் கொல்ல நினைத்தால் என்ன ஆகும் என்பதுதான் படத்தின் கரு. காப்பான் அரசியல் த்ரில்லர் படம் கிடையாது. கற்பனையான ஒரு பிரதமர் கதாபாத்திரம் இருக்கும் ஒரு கற்பனைப் படம் தான் இது. சில நிஜ சம்பவங்களை உங்களுக்கு இந்தப் படம் ஞாபகப்படுத்தலாம். ஆனால் நாங்கள் எந்த அரசியல் கட்சியையும் தாக்கவில்லை.

சூர்யா இப்போது அதிக சமூக உணர்வுடன் உள்ளார். மேலும் சரியான விஷயங்களைச் சொல்வது குறித்து தற்போது வற்புறுத்துகிறார். பெண்களைக் கிண்டல் செய்யும் ஒரு வசனம் இருந்தால் அதைப் பேசத் தயங்குகிறார். சில காட்சிகள் அவரை அசவுகரியமாக்கின. இது சூர்யா அல்ல, அந்த கதாபாத்திரம் பேசும் வசனங்கள் என நான் அவரை சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. சூர்யாவின் அரசியல் எண்ட்ரி பற்றி என்னால் சொல்ல முடியாது. ஆனால், காப்பான் திரைப்படத்தில் அரசியல் இல்லை என்பதை என்னால் சொல்ல முடியும்’’ என அவர் கூறியுள்ளார்.