×

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் : கே.எஸ்.அழகிரி அறிக்கை !

சில இயக்கங்கள் இஸ்லாமிய பயங்கரவாதத்தைத் தூண்டு வகையில் செயல்படுகின்றன. அவ்வாறு செயல்பட்டால் இந்து பயங்கரவாதம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது என்று இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சில இயக்கங்கள் இஸ்லாமிய பயங்கரவாதத்தைத் தூண்டு வகையில் செயல்படுகின்றன. அவ்வாறு செயல்பட்டால் இந்து பயங்கரவாதம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது என்று இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து
 

சில  இயக்கங்கள் இஸ்லாமிய பயங்கரவாதத்தைத் தூண்டு வகையில் செயல்படுகின்றன. அவ்வாறு செயல்பட்டால் இந்து பயங்கரவாதம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது என்று இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சில  இயக்கங்கள் இஸ்லாமிய பயங்கரவாதத்தைத் தூண்டு வகையில் செயல்படுகின்றன. அவ்வாறு செயல்பட்டால் இந்து பயங்கரவாதம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது என்று இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இதன் காரணமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது ஆளுநரிடம் புகாரும் அளிக்கப்பட்டது. 

இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஜெயலலிதா இருந்தவரை வாயை மூடிக் கொண்டு இருந்த அமைச்சர்கள் இன்று வரம்பு மீறிப் பேசுகின்றனர். இதனை எடப்பாடி பழனிசாமி கண்டிக்க அதிகாரம் இல்லாமல் இருக்கிறாரா? அல்லது அவரே இவர்களைத் தூண்டி விடுகிறாரா?. என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதனைத் தொடர்ந்து, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. அவர் பேசுவது மனநோயாளி உளறுவது போலவே இருந்து வருகிறது. மதநல்லிணக்கத்தை குலைக்கும் விதமாக அவர் பேசியதால் அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதச் சண்டையை உருவாக்கி ரத்தகளத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் அமைச்சரின் நோக்கமாக இருந்தால்,அதனைத் தோற்கடிக்க வேண்டிய பொறுப்பு மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்கு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.