×

அமைச்சரின் இறால் பண்ணை… தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி

தனது 100 நாள் தேர்தல் பிரச்சாரத்தின் முதல் நாள் பிரச்சாரத்தை நேற்று முன் தினம் திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் தொடங்கினார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். பிரச்சாரத்தின்போது அவர் வயலில் நடவு செய்துகொண்டிருந்த விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து, திமுக ஆட்சிக்கு வந்ததும் இதற்கு நல்ல காலம் பிறகும் என்று சொல்லி சென்றார். நேற்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் தனது இரண்டாம் நாள் பிரச்சாரத்தினை தொடங்கினார். அப்போது மூன்று முறை வேதாரண்யம் தொகுதி எம்.எல்.ஏ.வாக பணியாற்றி
 

தனது 100 நாள் தேர்தல் பிரச்சாரத்தின் முதல் நாள் பிரச்சாரத்தை நேற்று முன் தினம் திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் தொடங்கினார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். பிரச்சாரத்தின்போது அவர் வயலில் நடவு செய்துகொண்டிருந்த விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து, திமுக ஆட்சிக்கு வந்ததும் இதற்கு நல்ல காலம் பிறகும் என்று சொல்லி சென்றார்.

நேற்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் தனது இரண்டாம் நாள் பிரச்சாரத்தினை தொடங்கினார். அப்போது மூன்று முறை வேதாரண்யம் தொகுதி எம்.எல்.ஏ.வாக பணியாற்றி சமீபத்தில் மறைந்த மா.மீனாட்சிந்தரம் இல்லத்துக்கு சென்று அவரின் திருவுருவப்படத்துக்கு மரியாதை செய்து, கழக கொடியினையும் ஏற்றிவைத்தார்.

நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து வங்கக்கடல் மீது மீனவர்களுடன் படகில் பயணித்த உதயநிதி, கடல் பயணத்தின் போது சந்திக்கும் சவால்கள், வெளிநாட்டு ராணுவத்தின் அச்சுறுத்தல்கள் போன்ற நெருக்கடிகள் குறித்து உடன் வந்த மீனவர்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர், நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களை சந்தித்தபோது, சாகர் மாலா-மீன்பிடி திருத்தச் சட்டம், மீனவர் வாழ்வை விழுங்குமென அச்சம் தெரிவித்தனர். அதற்கு, கலைஞர் ஆட்சியின் சாதனைகளை சுட்டிக்காட்டி மலரவுள்ள தலைவர் ஸ்டாலின் அரசு மீனவர் பிரச்சினை தீர்க்கும் என உறுதியளித்தார் உதயநிதி.

வேதாரண்யம் கோடியக்காடு உப்பளம் சென்று உப்பு உற்பத்தியாளர்-தொழிலாளர் பிரச்சினைகளை கேட்டறிந்தார். அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் குறித்து மனு அளித்தனர். பாசிச பாஜக- அடிமை அதிமுகவின் அலட்சியத்தால் உப்பள தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தலைவர் ஸ்டாலின் ஆட்சியில் சரிசெய்யப்படும் என்றவர், வேதாரண்யம் – கள்ளிமேடு அடப்பாறு பாலத்தை பார்வையிட்டு, அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் இறால் பண்ணைகளை காக்க பாலத்தை தவறான இடத்தில் கட்டியுள்ளனர் என்று தெரிவித்த உதயநிதி, விவசாய நிலத்தில் கடல்நீர் புகுந்து பாதிக்கப்படும் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.