×

அமமுகவில் விழுந்த மற்றொரு விக்கெட்: திமுகவில் இணைகிறார் ஞானசேகரன்

வேலூர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஞானசேகரன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். சென்னை: வேலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ, ஞானசேகரன், திமுகவில் இன்று இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலூர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஞானசேகரன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஞானசேகரன் தினகரன் தலைமையில் அமமுகவில் இணைந்தார். அவருக்கு
 

வேலூர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஞானசேகரன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

சென்னை:  வேலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ, ஞானசேகரன், திமுகவில் இன்று இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வேலூர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஞானசேகரன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

இதையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஞானசேகரன் தினகரன் தலைமையில் அமமுகவில் இணைந்தார். அவருக்கு கட்சியின் அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டு பணியாற்றி வந்தார். 

இந்நிலையில், ஞானசேகரன் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில்  இன்று திமுகவில் இணைகிறார். ஏற்கனவே அமமுகவிலிருந்தது செந்தில் பாலாஜி, விபி கலைராஜன், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் விலகி திமுகவில் இணைந்துள்ள நிலையில் அடுத்ததாக அந்த பட்டியலில்   ஞானசேகரனும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.