×

அப்பாவுக்கே ஆப்பு வைத்த மகன்… உதயநிதி ஸ்டாலினுக்காக திமுகவில் நடக்கும் அக்கப்போர்..!

அப்பாவும், மகனும் இருவேறு நிலைப்பாடுகளை எடுத்து இருப்பது அவர்களது அரசியல் நாடகம் என விமர்சித்து வருகிறார்கள் திமுகவினர். இடைத்தேர்தல் நடக்க இருக்கும் விக்கிரவாண்டி தொகுதியில் மாவட்டச் செயலாளரான முன்னாள் அமைச்சர் பொன்முடி, மத்திய மாவட்டப் பொருளாளரான புகழேந்தியை விருப்பமனு தாக்கல் செய்யச் சொன்ன நிலையில் அவரும் விருப்பமனு கொடுத்தார். அதேநேரம், பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி எம்.பி.யு.மான கௌதம சிகாமணியும் இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்காக விருப்ப மனு கொடுத்துள்ளார். இதனால் அப்பாவும் மகனும் வெவ்வேறு நிலை எடுத்திருக்கிறார்கள். ஆனால்,
 

அப்பாவும், மகனும் இருவேறு நிலைப்பாடுகளை எடுத்து இருப்பது அவர்களது அரசியல் நாடகம் என விமர்சித்து வருகிறார்கள் திமுகவினர்.

இடைத்தேர்தல் நடக்க இருக்கும் விக்கிரவாண்டி தொகுதியில் மாவட்டச் செயலாளரான முன்னாள் அமைச்சர் பொன்முடி, மத்திய மாவட்டப் பொருளாளரான புகழேந்தியை விருப்பமனு தாக்கல் செய்யச் சொன்ன நிலையில் அவரும் விருப்பமனு கொடுத்தார். அதேநேரம், பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி எம்.பி.யு.மான கௌதம சிகாமணியும் இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்காக விருப்ப மனு கொடுத்துள்ளார்.

இதனால் அப்பாவும் மகனும் வெவ்வேறு நிலை எடுத்திருக்கிறார்கள். ஆனால், விக்கிரவாண்டியில் உதயநிதி போட்டியிட வேண்டும் என்பது கௌதம சிகாமணியின் நெடுநாள் விருப்பம்.  திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதியை விக்கிரவாண்டியில் நிற்கச் சொல்லி உதயநிதியிடமே நேரடியாக வலியுறுத்தி வந்தார்.

 

 

கடந்த மக்களவைத் தேர்தலில் பாரிவேந்தருக்காக ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டிருந்த கள்ளக்குறிச்சி தொகுதியை கடைசி நேரத்தில் உதயநிதிதான் தலையிட்டு, கௌதம சிகாமணிக்குப் பெற்றுக் கொடுத்தார். அதற்கு நன்றி செலுத்தும் வகையில் இப்போது விழுப்புரம் மாவட்டத்தில் உதயநிதியை போட்டியிட வற்புறுத்தி, தலைமையிடம் தன்னை உயர்த்திக் கொள்ளத் திட்டமிடுகிறார் கௌதம சிகாமணி. அதனால் தான் எப்படியாவது உதயநிதியை விழுப்புரம் மாவட்டத்திலிருந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வைக்க முயற்சி செய்கிறார் கௌதம சிகாமாணி.

உதயநிதிக்காக விருப்ப மனுவை அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கொடுத்திருக்கிறார் கௌதம சிகாமணி.  அப்பாவும், மகனும் இருவேறு நிலைப்பாடுகளை எடுத்து இருப்பது அவர்களது அரசியல் நாடகம் என விமர்சித்து வருகிறார்கள் திமுகவினர்.