×

அந்நிய செலாவணி மோசடி வழக்கு: நேரில் ஆஜராக சசிகலாவிற்கு விலக்கு

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து சசிகலாவிற்கு விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை: அந்நிய செலாவணி மோசடி வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து சசிகலாவிற்கு விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் தொலைக்காட்சிக்காக வெளிநாட்டில் இருந்து உபகரணங்களை வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக சசிகலா மீது தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கின், மறு குற்றச்சாட்டு மனுவை பதிவு செய்ய வரும் 13-ம் தேதி சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த அழைத்து
 

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து சசிகலாவிற்கு விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: அந்நிய செலாவணி மோசடி வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து சசிகலாவிற்கு விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சிக்காக வெளிநாட்டில் இருந்து உபகரணங்களை வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக சசிகலா மீது தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கின், மறு குற்றச்சாட்டு மனுவை பதிவு செய்ய வரும் 13-ம் தேதி சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த அழைத்து வருமாறு பெங்களூரு சிறைத்துறைக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால், பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவின் உடல்நிலை சரியில்லை என்றும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறும் சசிகலா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், சசிகலா தரப்பு கோரிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அதோடு இன்றி, அந்த விசாரணையை காணொளிக் காட்சி மூலம் நடத்திடவும் எழும்பூர் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.