×

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவிற்கு புதிய சிலை

அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்திருக்கும் ஜெயலலிதாவின் பழைய சிலையை மாற்றிவிட்டு புதிய சிலை வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்திருக்கும் ஜெயலலிதாவின் பழைய சிலையை மாற்றிவிட்டு புதிய சிலை வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலை சில மாதங்களுக்கு முன்னர் அதிமுக தலைமை அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. அந்த சிலை தத்ரூபமாக இல்லாததால், சமூகவலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதன்பின், அந்த
 

அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்திருக்கும் ஜெயலலிதாவின் பழைய சிலையை மாற்றிவிட்டு புதிய சிலை வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்திருக்கும் ஜெயலலிதாவின் பழைய சிலையை மாற்றிவிட்டு புதிய சிலை வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலை சில மாதங்களுக்கு முன்னர் அதிமுக தலைமை அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

அந்த சிலை தத்ரூபமாக இல்லாததால், சமூகவலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதன்பின், அந்த சிலை விரைவில் மாற்றியமைக்கப் படும் என்று அதிமுக தலைமை அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் புதிய சிலை வடிவமைக்கும் பணிகள் முடிந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த சிலையை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விரைவில் திறந்து வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.