×

அதிமுக எம்எல்ஏ தம்பி திமுகவில் இணைந்தார்!

செந்தில் பாலாஜிக்கு கரூர் மாவட்டச் செயலாளர் பதவி, தங்க தமிழ்செல்வனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் என திமுக அவர்களுக்குப் பதவி வழங்கியது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பரணி கார்த்திகேயன் திமுகவில் இணைந்துள்ளார். டிடிவி தினகரனின் அமமுகவிலிருந்த செந்தில் பாலாஜி, கலைராஜன், தங்க தமிழ்செல்வன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு கரூர் மாவட்டச் செயலாளர் பதவி, தங்க தமிழ்செல்வனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் என திமுக அவர்களுக்குப் பதவி வழங்கியது.
 

செந்தில் பாலாஜிக்கு  கரூர் மாவட்டச் செயலாளர் பதவி, தங்க தமிழ்செல்வனுக்கு கொள்கை பரப்பு செயலாளர்  என திமுக அவர்களுக்குப் பதவி  வழங்கியது. 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர்  பரணி கார்த்திகேயன் திமுகவில் இணைந்துள்ளார்.

டிடிவி தினகரனின்  அமமுகவிலிருந்த செந்தில் பாலாஜி, கலைராஜன், தங்க தமிழ்செல்வன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு  கரூர் மாவட்டச் செயலாளர் பதவி, தங்க தமிழ்செல்வனுக்கு கொள்கை பரப்பு செயலாளர்  என திமுக அவர்களுக்குப் பதவி  வழங்கியது. 

இந்நிலையில் அமமுக புதுக்கோட்டை மாவட்டச் செயலாளரும் அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதியின் சகோதரருமான பரணி கார்த்திகேயன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.

முன்னதாக அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து அவர்களுக்குச் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இதையடுத்து தனிக்கட்சி ஆரம்பித்த தினகரனுடன் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி முதல்வரை நேரில் சந்தித்து ஆதரவு வழங்கியது குறிப்பிடத்தக்கது.