×

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?- முதல்வர் எடப்பாடி விளக்கம்

“தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை” என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். ஈரோட்டில் கொரோனா பாதிப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, “அணைகளை புனரமைக்கவும், சாலை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்திக்கடவு – அவிநாசி திட்டப் பணிகள் 30 விழுக்காடு நிறைவடைந்திருக்கிறது. அடுத்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் இத்திட்டப் பணிகள் முழுவதும்
 

“தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை” என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

ஈரோட்டில் கொரோனா பாதிப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, “அணைகளை புனரமைக்கவும், சாலை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்திக்கடவு – அவிநாசி திட்டப் பணிகள் 30 விழுக்காடு நிறைவடைந்திருக்கிறது. அடுத்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் இத்திட்டப் பணிகள் முழுவதும் நிறைவடையும்.

கொரோனா காலத்தில் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. மின் கட்டணத்தை நிர்ணயிப்பதில் எந்தவித குளறுபடியும் கிடையாது. இந்த விவகாரத்தில் திமுகவினர் வேண்டும் என்றே குற்றம்சாட்டி போராட்ட அறிவிப்பை வெளியிடுகின்றனர்.
ஐடிபிஎல் திட்டம் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்படும். இத்திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு 100 விழுக்காடு இழப்பீடு வழங்கப்படும். தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை. கொரோனா பரவலைத் தடுக்க வீடு வீடாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இதனால், வரும் நாட்களில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறையும்” என்று கூறினார்.