×

பதவி தராததால் விரக்தி- திமுகவுக்கு ‘குட்பை’ சொல்லும் ஓபிஎஸ்?

 

தமிழக அரசியல் களம் மீண்டும் அதிரடியாக சூடுபிடித்துள்ளது. ராஜினாமாக்கள், கட்சி தாவல்கள், புதிய கூட்டணி நகர்வுகள் என தொடர்ச்சியான மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் திமுகவில் இணைந்து மூன்று மாதங்கள் ஆன பிறகும், எதிர்பார்த்த முக்கிய பதவி வழங்கப்படாததால் ஓபிஎஸ் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. முக்கிய கட்சிப் பொறுப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த அவர், தற்போது புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனை கவனத்தில் கொண்டு, ஓபிஎஸ்சிடம் தவெக நிர்வாகிகள் பேசி  வருவதாகவும்  தெரிகிறது.

இந்த சூழ்நிலையில், ஓபிஎஸ் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என்ற தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே அதிமுகவை சேர்ந்த பல முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் விலகியுள்ள நிலையில், மேலும் சிலரும் அதே பாதையைத் தேர்வு செய்யலாம் என கூறப்படுகிறது. ஒருவேளை ஓபிஎஸ் தவெகவில் இணைந்தால், அது தென் மாவட்ட அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.