×

தமிழக பாஜக தலைவர் பதவியில் நீடிப்பாரா எல்.முருகன்?

தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ள அவருக்கு மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை ஆகிய மூன்று துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. எல்.முருகனுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், மீனவர்களின் நலன் காப்பதில் எந்த சமரசமும் இன்றி மத்திய அரசு செயல்படும்.
 

தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ள அவருக்கு மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை ஆகிய மூன்று துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. எல்.முருகனுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், மீனவர்களின் நலன் காப்பதில் எந்த சமரசமும் இன்றி மத்திய அரசு செயல்படும். 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் முற்றிலும் குறைந்துள்ளது. தமிழகத்திற்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பிரதமர் மோடி கொடுத்துள்ளார். தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பாலமாக செயல்படுவேன் என்று கூறியிருக்கிறார்.

இதையடுத்து செய்தியாளர்கள் அவரிடம் தமிழக பாஜக தலைவர் பதவியில் நீடிப்பீர்களா? என்று கேள்வியெழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும் என்று தெரிவித்திருக்கிறார்.