அதிமுகவில் இருந்து மேலும் 21 எம்எல்ஏக்கள் ராஜினாமா?
வேலுமணி , சிவி.சண்முகம் தலைமையில் 21 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவில் ஐக்கியம் ஆவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக கோட்டை என கூறப்பட்ட இரண்டு தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் சுலபமாக வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் திமுக இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. இதில் என்ன ட்வீஸ்ட் என்றால் இரண்டு தொகுதிகளுமே அதிமுக மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. குறிப்பிட்ட சமூகம் நிறைந்த தாராபுரம் தொகுதியில் தனக்கு வெற்றி கிடைக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி எதிர் பார்த்தார். ஆனால் அவருக்கு நேர்மாறாக மக்கள் வாக்களித்து உள்ளனர். இதன் மூலம் அதிமுக தலைமை மீது மீண்டும் அக்கட்சியினருக்கு நம்பிக்கையை இழந்துள்ளனர். ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை இழந்து முதல்வர் பதவியை இழந்து தற்போது மூன்றாவது இடத்தை நோக்கி அதிமுக கரைந்து கொண்டே செல்கிறது. இது அதிமுக தலைமை மீது மக்களுக்கு இருக்கிற நம்பிக்கையின்மையை காட்டுகிறது.
இந்நிலையில் இடைத்தேர்தலில் அதிமுகவிலிருந்து விலகி சென்ற எம்எல்ஏக்கள் தவெக விசில் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைமை பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கோரிக்கையை ஏற்று அதிமுக தலைமை பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி விலகாவிட்டால் சரியாக ஒரு வாரத்தில் அதிமுக கூடாரம் மொத்தமா காலி ஆகிவிடும் என்றும், வேலுமணி , சிவி.சண்முகம் தலைமையில் 21 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவில் ஐக்கியம் ஆவார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.