×

முதல்வர் விஜய் பயணம் திடீர் ரத்து ஏன்?

 

காவிரி & மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடகாவுக்கு ஆக-3 அன்று நண்பகல் 12 மணிக்கு செல்லவிருந்தார். இதற்காக கர்நாடகா அரசும் தயார் நிலையில் இருந்தது. குறிப்பாக, விஜயுடன் என்ன பேச வேண்டும்? வழக்கு குறித்து எப்படி விளக்கம் அளிக்க வேண்டும், நீர்நிலைகளில் நீர் இருப்பு , கடந்த காலங்களில் திறக்கப்பட்ட நீர் ஏன் இப்போது திறக்கப்படவில்லை என்பது வரை விளக்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக நீர்வளம் & சட்டத்துறை சார்பில் அதிகாரிகள் கூட தேர்வு செய்யப்பட்டனர். மேலும் ஆனால் இன்று & நேற்று நடந்த நிகழ்வுகள் விஜயின் வருகை இப்போதைக்கு வேண்டாம் என முடிவு செய்யும் நிலைக்கு தள்ளியாதாக சொல்கிறார்கள். என்னவென கர்நாடகாவை சேர்ந்த மூத்தவர்களிடம் பேசிய போது, விஜய் வருகை கர்நாடகா அரசுக்கே அழுத்தமாக மாறியது என்றனர். 

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக போராட்டம் நடத்த தொடங்கினார்கள். இன்னும் சொல்லப்போனால், கர்நாடகாவில் உள்ள பிற அணைகளில் காலவரையற்ற போராட்டம் நடத்த பாஜக ஆதரவு விவசாய சங்கங்கள் முடிவு செய்தனர். மேலும், விஜய் வருகையின் போது எதிரான போராட்டங்களை நடத்தவும் முடிவு செய்தனர். அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் விஜய் வந்தால் என்ன சொல்ல போகிறோம் என பேசியபோது, இது கர்நாடகா அரசுக்கே அழுத்தமாக கூட மாறலாம் என பிறக்கட்சி எம்.பி-க்கள் எச்சரித்து உள்ளனர். இதனாலேயே இன்று காலை டி.கே ஒரு அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தினார் என்றும் அதில், விஜய் வருகையின் போது எல்லையில் பதற்றம் ஏற்படும், விவசாயிகள் போராட்டம் இருக்கும் என்பதால் இது கர்நாடகா சட்ட ஒழுங்கில் பிரச்சனை ஏற்படும். ஏற்கனவே ஜனநாயகன் திரைப்பட திரையிட பிரச்சனை நடந்து வரும் சூழலில் விஜய் வந்தால் இன்னும் எதிர்ப்புகள் இருக்கும். எனவே வருவதை தவிர்ப்பதே சிறந்த ஆலோசனை என காவல்துறை அதிகாரிகள் டி.கே விடம் கூறியுள்ளனர். வேண்டும் என்றால் காணொளி மூலம் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தலாம். இதில் "கர்நாடகா-தமிழ்நாடு" மட்டுமல்ல ஆந்திரா , புதுச்சேரி , கேரளா உள்ளிட்ட மாநிலங்களையும் அழைப்போம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், கர்நாடகா உள்துறை அமைச்சர் & நீர்வளத்துறை அமைச்சர்கள் , கர்நாடகா & தமிழ்நாட்டில் விரைவில் சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில் இது அரசியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என சொல்லியுள்ளனர். 

இதன் பிறகே இப்போதைக்கு விஜய் வருவதை தவிர்க்க வேண்டும் என டி.கே வேண்டுகோள் விடுத்தார். மேலும், கர்நாடகா சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு முன்பு இந்த விவகாரத்தில் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டதாலேயே நீதிமன்றம் , பிரதமரிடம் முறையீடு என்ற பாதையில் கர்நாடகா அரசு நகர தொடங்கியுள்ளனர். என்ன நடந்தாலும் அது கர்நாடகா அரசுக்கு சாககம் தானே என கேட்டபோது, இல்லை அதான் தவறு! நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது என்பதும் இன்று பேசப்பட்டுள்ளது. எனவே இனிவரும் நாட்களில் நீர் கொடுத்தால் அது பாஜக அரசியலுக்கு சாதகமாக மாறும். மேலும்,விஜய் வருகைக்கு பிறகு தண்ணீர் கொடுக்கவில்லை என்றாலும் அது "தவெக-காங்கிரஸ்" கூட்டணிக்கே சிக்கலாக மாறும் என்ற காங்கிரஸ் தலைமையின் கருத்து குறித்து பேசியுள்ளனர். எந்த வகையிலும் இந்த விவகாரம் கூட்டணி பிரச்சனையாக மாறிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க காங்கிரஸ் தலைமை கூறியுள்ள நிலையில் அது குறித்தும் ஆலோசிக்கப்பட்ட பிறகே இந்த முடிவு என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.