×

தனுஷ் அமைதி காப்பது ஏன்? ரஜினியின் புதிய திட்டம் காரணமா?

கிட்டத்தட்ட15 ஆண்டுகளுக்கும் மேலாக “ரஜினியை அரசியலுக்கு வாருங்கள்” என அவரது ரசிகர்கள் அழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். “நான் ஒரு தடவ சொன்னா 100 தடவ சொன்னது மாதிரி” என்று சொல்லக்கூடிய ரஜினிகாந்த் 100 முறைக்கும் மேல அரசியலுக்கு வரப்போவதாக சொல்லி விட்டு, ஆனால் ஒரு முறை கூட களத்தில் கால் வைக்கவில்லை. ஒரு கட்டத்தில் இதோ ரஜினி கட்சி தொடங்கப் போகிறார் என ரசிகர்கள் உற்சாகமாகி, அவருடன் புகைப்படங்கள் எல்லாம் எடுத்து, மாவட்ட வாரியாக தேர்தல் வேலையும்
 

கிட்டத்தட்ட15 ஆண்டுகளுக்கும் மேலாக “ரஜினியை அரசியலுக்கு வாருங்கள்” என அவரது ரசிகர்கள் அழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். “நான் ஒரு தடவ சொன்னா 100 தடவ சொன்னது மாதிரி” என்று சொல்லக்கூடிய ரஜினிகாந்த் 100 முறைக்கும் மேல அரசியலுக்கு வரப்போவதாக சொல்லி விட்டு, ஆனால் ஒரு முறை கூட களத்தில் கால் வைக்கவில்லை. ஒரு கட்டத்தில் இதோ ரஜினி கட்சி தொடங்கப் போகிறார் என ரசிகர்கள் உற்சாகமாகி, அவருடன் புகைப்படங்கள் எல்லாம் எடுத்து, மாவட்ட வாரியாக தேர்தல் வேலையும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.


கடைசியில் பார்த்தால் எனது உடல் நிலை சரியில்லை. இதனை வைத்துக் கொண்டு எப்படி அரசியலில் ஈடுபடுவது என யோசிக்கிறேன் என்பது மாதிரி சொல்லி, ‘ஜகா’ வாங்கும் நிலைக்கு வந்து விட்டார் ரஜினி. இதற்கிடையே உச்ச கட்ட கிளைமாக்ஸாக அவரது நெருங்கிய அரசியல் ஆலோசகரான குரு மூர்த்தி கூட துக்ளக் இதழில் கார்ட்டூன் போட்டு ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என ஜாடை மாடையாகச் சொல்லி விட்டார்.


கடந்த 3 மாதங்களாக ரஜினி வருகையை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவரது வருகை பற்றி அனைத்து கட்சி அரசியல் தலைவர்களும் விமர்சனம் செய்வது ஒரு புறம் இருக்க, பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும், இணையதள செய்திச் சேனல்களும் ரஜினி பற்றி பரபரப்பாக பேசிக் கொண்டிருக்க, ஒரே ஒருவர் மட்டும் எதுவும் பேசாமல் அமைதி காத்து வருகிறார். அவர் வேறு யாருமல்ல… பிரபல இளம் கதாநாயகனும் ரஜினியின் மருமகனுமான தனுஷ்தான்..

தனது மாமனாரின் அரசியல் வருகை பற்றி வாய் எதும் திறக்காத அவர் சமீப காலமாக வெளியிலும் கூட அதிகம் முகம் காட்டவில்லை.ஆனால். அதே சமயத்தில் மாமனாரும் மருமகனும் சேர்ந்து அரசியல் களம் பற்றி வீட்டில் தனியாக பல கட்டங்களில் ஆலோசனை நடத்தியதாகச் சொல்கிறார்கள். ஒரு கட்டத்தில் தன்னால் முடியாத அரசியல் பிரவேசத்தை தனுஷ் மூலம் நிறைவேற்றலாமா என்று கூட பேசியதாகச் சொல்கிறார்கள். அதாவது தனது ரசிகர்கள் ஏமாற்றம் அடையாமலிருக்கும் வகையில் தனுஷ்சை களம் காணச் செய்து பின்னணியில் தான் இயங்கலாமா? என்றும் ஆலோசனைகள் செய்ததாகச் சொல்லப்படுகிறது..
இப்படி விஷயம் எதுவாக இருந்தாலும் வருகிர 2021 ஜனவரி மாதம் வரை பொறுத்திருக்க வேண்டும். அதன் பின்னர்தான் தனது இறுதி முடிவை வெளியிட வேண்டும் என ரஜினிகாந்த் முடிவெடுத்து வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.