×

அதிமுக அலுவலகம் பூட்டப்பட்டது ஏன்? எம்எல்ஏ குமரகுரு விளக்கம்!

வழிகாட்டுக்குழு உறுப்பினர் மோகன் அதிமுக மாவட்ட அலுவலகம் சென்ற போது, அலுவலகம் மூடப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது . அதிமுக வழிகாட்டுக்குழு உறுப்பினர் மோகன் கள்ளக்குறிச்சி அதிமுக அலுவலகத்திற்கு சென்ற போது அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. உளுந்தூர் பேட்டை அதிமுக எம்எல்ஏவான குமரகுரு, மோகன் வருவதற்கு முன்பே அலுவலகத்தை பூட்டி சென்றதாக சொல்லப்படுகிறது. குமரகுரு பழனிசாமியின் ஆதரவாளர் என்பதால் ஓபிஎஸ் ஆதரவாளர் மோகன் வருவதால் அலுவலகம் பூட்டப்பட்டது என்று கூறப்பட்டதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து கூறும்
 

வழிகாட்டுக்குழு உறுப்பினர் மோகன் அதிமுக மாவட்ட அலுவலகம் சென்ற போது, அலுவலகம் மூடப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .

அதிமுக வழிகாட்டுக்குழு உறுப்பினர் மோகன் கள்ளக்குறிச்சி அதிமுக அலுவலகத்திற்கு சென்ற போது அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. உளுந்தூர் பேட்டை அதிமுக எம்எல்ஏவான குமரகுரு, மோகன் வருவதற்கு முன்பே அலுவலகத்தை பூட்டி சென்றதாக சொல்லப்படுகிறது. குமரகுரு பழனிசாமியின் ஆதரவாளர் என்பதால் ஓபிஎஸ் ஆதரவாளர் மோகன் வருவதால் அலுவலகம் பூட்டப்பட்டது என்று கூறப்பட்டதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து கூறும் உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏ குமரகுரு, கொரோனா பரவாமல் தடுக்க கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக அலுவலகம் பூட்டப்பட்டது. இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார். அதேபோல் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ப. மோகன், அதிமுகவுக்குள் எந்த உரசலும் இல்லை . பொறுப்பு வழங்கப்பட்டதால் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க மட்டுமே சென்றேன். அலுவலகம் பூட்டி இருந்ததால் தொண்டர்களாக ஆவேசப்பட்டிருப்பார்கள். அதுபற்றி எனக்கு தெரியாது என்றார்.