கொளத்தூரில் ஏற்பட்ட அதிர்ச்சி தோல்விக்கு உண்மையான காரணம் யார்?- குற்றவாளி கூண்டில் சேகர்பாபு
கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இது திமுகவுக்கு எதிர்பாராத அதிர்ச்சியை அளித்தது. இந்த தொகுதிக்கான பொறுப்பு சேகர்பாபுவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சேகர்பாபுவின் தன்னிச்சையான செயல்பாடுகள்தான் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தோல்விக்கு முதல் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதை திமுகவின் உடன்பிறப்புகளே நேரடியாக ஊடகங்கள், சமூக ஊடகங்களில் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார்கள். அவர், கட்சித் தொண்டர்களையும் உள்ளூர் நிர்வாகிகளையும் துளியும் மதிக்காமல், கள நிலவரத்தையும் எதிர்த்தரப்பின் உண்மையான பலத்தையும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டார் என்று அடிமட்டத் தொண்டர்கள் விமர்சிக்கிறார்கள். கொளத்தூரில் ஏற்பட்ட இந்த அதிர்ச்சித் தோல்விக்கு உண்மையான காரணம் யார் என்பது குறித்து திமுக தரப்பில் தீவிரப் புலன் விசாரணை செய்தது. ஒன்றரை மாதங்கள் ஆன நிலையில் உண்மை எப்போது வெளிவரும் என்று தொண்டர்கள் புலம்புகின்றனர்.