×

கமல்-ரஜினி சந்திப்பில் நிகழ்ந்தது என்ன? – விளக்கும் சினேகன்

பரபரப்பான அரசியல் சூழலில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நண்பர் ரஜினியுடன் திடீர் சந்திப்பு நிகழ்த்தினார். இது அரசியல் வட்டாரத்தில் அனலைக் கிளப்பியது. ஏற்கெனவே ரஜினியிடம் ஆதரவு கேட்க போவதாக கமல்ஹாசன் கூறிவந்ததால் இந்தச் சந்திப்பு முக்கியவத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. சுமார் 45 நிமிடங்கள் இச்சந்திப்பில் கமல் ரஜினியின் உடல்நலம் குறித்து விசாரித்ததுடன் அரசியல் பேசியதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. தற்போது இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இளைஞரணி பிரிவு செயலாளரும் பாடலாசிரியருமான சினேகன்,
 

பரபரப்பான அரசியல் சூழலில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நண்பர் ரஜினியுடன் திடீர் சந்திப்பு நிகழ்த்தினார். இது அரசியல் வட்டாரத்தில் அனலைக் கிளப்பியது. ஏற்கெனவே ரஜினியிடம் ஆதரவு கேட்க போவதாக கமல்ஹாசன் கூறிவந்ததால் இந்தச் சந்திப்பு முக்கியவத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. சுமார் 45 நிமிடங்கள் இச்சந்திப்பில் கமல் ரஜினியின் உடல்நலம் குறித்து விசாரித்ததுடன் அரசியல் பேசியதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

தற்போது இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இளைஞரணி பிரிவு செயலாளரும் பாடலாசிரியருமான சினேகன், “இது ஆதரவு கேட்பதற்கான நேரம் இல்லை. ரஜினிகாந்த் உடல்நிலை குறித்த விசாரிப்பதற்காகவே கமல்ஹாசன் நேரடியாகச் சென்றிருப்பார். திரைத்துறையில் நீண்டகால நண்பர்கள் என்ற அடிப்படையில் ரஜினியின் உடல்நிலையில் கமலுக்கு அக்கறை இருக்கிறது.

நட்பின் இருப்பை உறுதிசெய்யும் வகையில் அவ்வப்போது இருவரும் தொலைபேசி மூலமாக பேசிக்கொள்வது வழக்கம். இப்போது ரஜினிகாந்த் வீட்டுக்கு கமல் சென்றிருப்பது முழுக்க முழுக்க நட்பு அடிப்படையிலானது. பிரத்யேகமாக அரசியலைப் பற்றி பேசுவதற்காக கமல்ஹாசன் செல்லவில்லை. கண்டிப்பாக காலம் வரும் போது அதற்கான பயணம் இருக்கும். அப்போது ஆதரவு கேட்கத்தான் போகிறார். அதேசமயம் சந்திப்பின்போது கண்டிப்பாக அரசியலும் பேசுயிருப்பார்கள். ஏனெனில் இருவருமே தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தனி கட்சி தொடங்கும் திட்டத்தோடு இருந்தவர்கள்” என்றார்.