×

முதல்வரின் பிரச்சாரத்துக்காக தளர்வுகள் அளிக்கப்பட்டதா?

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரத்திற்காக தளர்வுகள் அளிக்கப்படவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் கூடுவதற்கு அரசு தடை விதித்திருந்தது. அதன் காரணமாகவே பாஜகவின் வேல் யாத்திரைக்கும், உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் பிரச்சாரத்துக்கும், கமல்ஹாசனின் பிரச்சாரத்தூக்கும் அரசு அனுமதி வழங்கவில்லை. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பிரச்சாரத்திற்கு விரைந்து அனுமதி அளிக்க வேண்டும் என பல தரப்பினர் முன்வைத்த கோரிக்கையின் பேரில், டிச.19ம் தேதி முதல் அரசியல் கூட்டங்கள் நடத்த முதல்வர் அனுமதி
 

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரத்திற்காக தளர்வுகள் அளிக்கப்படவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் கூடுவதற்கு அரசு தடை விதித்திருந்தது. அதன் காரணமாகவே பாஜகவின் வேல் யாத்திரைக்கும், உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் பிரச்சாரத்துக்கும், கமல்ஹாசனின் பிரச்சாரத்தூக்கும் அரசு அனுமதி வழங்கவில்லை. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பிரச்சாரத்திற்கு விரைந்து அனுமதி அளிக்க வேண்டும் என பல தரப்பினர் முன்வைத்த கோரிக்கையின் பேரில், டிச.19ம் தேதி முதல் அரசியல் கூட்டங்கள் நடத்த முதல்வர் அனுமதி அளித்தார்.

அதன் படி இன்று முதல் அந்த தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, நாளை முதல் தான் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவிருப்பதாக அறிவித்தார். தளர்வுகள் அளிக்கப்பட்ட முதல் நாளே அவர் பிரச்சாரம் செய்ததால், அதிமுக பரப்புரைக்காக தான் இதுவரை கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்ததாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் புதிதாக பாதிப்புகள் இல்லை. இதன் காரணமாகவே தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. முதல்வருக்காக எந்த தளர்வுகளும் வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.