×

“ஒன்றிய அரசு தடுத்தாலும் நாங்கள் மக்களிடம் உண்மையை சொல்வோம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்!

கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட தடுப்பூசி செலுத்தும் திட்டம் சிறப்புற நடைபெற்றது. முன்களப் பணியாளர்கள், முதியவர்கள், இணை நோய் கொண்ட 45 வயதுடையவர்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் மத்திய அரசே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு விநியோகித்தது. ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த திட்டத்தை மே 1ஆம் தேதியிலிருந்து மத்திய அரசு மாற்றியது. அதாவது 18-44 வயதுடையவர்களுக்கு அந்தந்த மாநிலங்களே கொள்முதல் செய்து தடுப்பூசி செலுத்த வேண்டும் என மத்திய அரசு
 

கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட தடுப்பூசி செலுத்தும் திட்டம் சிறப்புற நடைபெற்றது. முன்களப் பணியாளர்கள், முதியவர்கள், இணை நோய் கொண்ட 45 வயதுடையவர்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் மத்திய அரசே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு விநியோகித்தது. ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த திட்டத்தை மே 1ஆம் தேதியிலிருந்து மத்திய அரசு மாற்றியது. அதாவது 18-44 வயதுடையவர்களுக்கு அந்தந்த மாநிலங்களே கொள்முதல் செய்து தடுப்பூசி செலுத்த வேண்டும் என மத்திய அரசு கொள்கையை முற்றிலுமாக மாற்றியது.

இதற்காக மாநில அரசுகள் உள்நாட்டு தடுப்பூசி நிறுவனங்களிடம் ஆர்டர் கொடுத்தனர். ஆனால் அவர்கள் ஆர்டருக்கேற்ப தடுப்பூசிகளை விநியோகிக்கவில்லை. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலும், தனியாருக்கு கொள்ளை லாபத்தில் விற்பதிலுமே ஆர்வம் காட்டின. இவர்களை நம்பினால் வேலைக்காகது என்று எண்ணி உலகளாவிய டெண்டர்களை அரசுகள் கோரின. ஆனால் அவர்களோ மத்திய அரசுடன் தான் டீல் பேசுவோம் என்று கையை விரிக்க நிர்கதியாய் நின்றார்கள். இதனால் நாடு முழுவதும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவியது.

இதுதொடர்பான வழக்கில் மத்திய அரசை சராமரியாக விமர்சித்த உச்ச நீதிமன்றம் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது மத்திய அரசின் பொறுப்பே என்று அதிரடியாக உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் கிழித்து தொங்கவிட்டதற்குப் பின்பு தான் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்குகிறோம் என பிரதமர் மோடி பேசினார். தற்போது வரை ஆர்டர் மட்டுமே கொடுத்திருக்கிறது மத்திய அரசு. அதனால் இப்போதும் அதே பற்றாக்குறை நிலையே தொடர்கிறது. இத்தகைய சூழலில் மத்திய அரசு அனைத்து மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதேசங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில், “மத்திய அரசின் eVIN மின்னணு அமைப்பில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு, தடுப்பூசி பாதுகாக்கப்படும் வெப்பநிலை உள்ளிட்ட விவரங்களை மாநில அரசுகள் தினசரி பதிவேற்றம் செய்கின்றன. இதில் பதிவு செய்யப்படும் தகவல்கள் மிகவும் ரகசியமானவை. இந்தத் தகவல்கள் தனியாருக்கு தெரிந்தால் அவர்கள் தவறான வழியில் ஈடுபடக் கூடும். தடுப்பூசி திட்டத்தை மேம்படுத்த மட்டுமே அந்த தகவல்களை மாநிலங்கள் பயன்படுத்த வேண்டும். ஆகவே அந்தத் தகவல்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலின்றி எந்த நிறுவனத்துடனும் ஊடகங்களுடனும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளக் கூடாது. மக்களுக்கு தெரியும்படி ஆன்லைனில் வெளியிடக் கூடாது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “தடுப்பூசிகள் கையிருப்பு விவரம் பற்றி மக்களிடம் சொல்ல கூடாது என ஒன்றிய அரசு கூறியுள்ளது. ஆனால் உண்மை நிலை என்னவென்று மக்களிடம் தெரிவிப்பது தான் சரியாக இருக்கும். ஆகவே தடுப்பூசி கையிருப்பு குறித்து மக்களிடம் நாங்கள் சொல்வோம். இப்போது எங்களிடம் வெறும் 1,060 தடுப்பூசிகள் மட்டுமே உள்ளன” என்றார்.