×

“போக்சோ சட்டம் மட்டும் இல்லையென்றால் தமிழக பெண்களை திமுகவிடமிருந்து காப்பாற்றியிருக்க முடியாது”

 

போக்சோ சட்டம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் தமிழக பெண்களை திமுகவிடம் இருந்து யாராலும் காப்பாற்றி இருக்க முடியாது என்று பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.


தர்மபுரி மாவட்டம் அரூரில் 8 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர்,  “75 ஆண்டு காலம் இந்தியாவை காங்கிரஸ் ஆட்சி செய்தது. அப்போது 370 -ஐ பேசுவதற்கும், தொடுவதற்கும் ஆண்மை இல்லாத காங்கிரஸ் கட்சி இந்திய நாட்டில் உள்ள காஷ்மீரை இந்தியா நாடு என்று சொல்ல முடியாத கட்சி தான் ஆண்மை இல்லாத காங்கிரஸ் கட்சி. போக்சோ  சட்டம் ஒன்று மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் தமிழகத்தில் உள்ள பெண்களை திமுகவினரிடம் இருந்து காப்பாற்றி இருக்க முடியாது. பொதுவாகவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர் குறைந்துள்ளது என்பதுதான் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் குற்றச்சாட்டு. 

சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 20 படு கொலைகள் நடைபெற்றுள்ளன. கடந்த ஒரு ஆண்டில் கஞ்சா விற்பனை அதிகமாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். கொலை, கொள்ளை போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளது. இதுகுறித்து பலமுறை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, தெரிவித்தும் இதுவரை தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது வருத்தத்துக்குரியது” எனக் கூறினார்.