×

வெற்றி நமக்கே! தம்ஸ் அப்புடன் விஜய்காந்த் பிரச்சாரம்

அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் இருந்த தேமுதிக கூட்டணியை விட்டு வெளியேறியது. தற்போது அமமுகவும் கூட்டணி அமைத்துள்ளன தேமுதிக மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. உடல்நலக்குறைவு காரணமாக இந்த தேர்தலில் விஜயகாந்த் போட்டியிடவில்லை. இருப்பினும் அவர் தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என பிரேமலதா விஜயகாந்தும், விஜய பிரபாகரனும் தொடர்ந்து கூறிவந்தனர். அதன்படியே, பிரச்சார களத்திற்கு வந்து தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார் விஜயகாந்த். இந்நிலையில்
 

அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் இருந்த தேமுதிக கூட்டணியை விட்டு வெளியேறியது. தற்போது அமமுகவும் கூட்டணி அமைத்துள்ளன தேமுதிக மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

உடல்நலக்குறைவு காரணமாக இந்த தேர்தலில் விஜயகாந்த் போட்டியிடவில்லை. இருப்பினும் அவர் தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என பிரேமலதா விஜயகாந்தும், விஜய பிரபாகரனும் தொடர்ந்து கூறிவந்தனர். அதன்படியே, பிரச்சார களத்திற்கு வந்து தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார் விஜயகாந்த்.

இந்நிலையில் மதுரை மேற்கு தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் பாலசந்திரனை ஆதரித்து விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். உடல்நலக்குறைவால் பேச இயலாத விஜயகாந்த், வேனில் உள் அமர்ந்தபடி இரு கைகளிலும் கட்டை விரலை உயர்த்தி வெற்றி முத்திரையை காண்பித்தும் கரங்களை கூப்பி வணங்கியபடியும், முரசு சின்னம் பொருத்திய சிறிய அளவிலான பதாகையை கையில் ஏந்தியவாறும் காரின் உள்ளே அமர்ந்த படி பிரச்சாரம் செய்தார்.