#BREAKING சி.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் நாளை தவெக இணைய உள்ளதாக தகவல்
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சி.வி சண்முகம், விஜயபாஸ்கர் நாளை தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடன் சேர்ந்து திருப்பத்தூர் முன்னாள் சேர்மன் பொன்மணி நாளை தவெகவில் இணைய உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. 2026 தமிழக சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சிக்குள் பல்வேறு அணிகள் உருவாகின. குறிப்பாக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் எடப்பாடி எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்தது அதிமுக தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதன் தொடர்ச்சியாக, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், சிவி சண்முகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானது. இந்த விவகாரம் வெளிப்படையாக பேசப்படாத போதிலும், இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட அரசியல் இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வந்ததாக கூறப்பட்டது. அதேநேரத்தில், சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் ஒருங்கிணைந்த அணியாக செயல்பட ஒப்புக் கொண்டனர். இதனால் அதிமுகவில் நிலவி வந்த பிளவு முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு உருவானது. ஆனால் அந்த சந்திப்பில் முக்கிய தலைவரான சிவி சண்முகம், விஜயபாஸ்கர் பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இருவரும் புதிய முடிவை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கருதுவதாக கூறப்படுகிறது. மற்றொரு தரப்பினர், அதிமுகவிலேயே இருந்து அரசியல் பயணத்தை தொடர வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், நாளை திங்கட்கிழமை சிவி சண்முகம், விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யப் போகிறார் எனவும், அன்றே தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். அவருடன் சேர்ந்து திருப்பத்தூர் முன்னாள் சேர்மன் பொன்மணி நாளை தவெகவில் இணைய உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இவருக்கு திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் எம்எல்ஏ சீட் வழங்குவேன் என்று எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார் அதனால் 2 கோடி வரை செலவு செய்தார். ஆனால் சீட் வழங்காத காரணத்தால் சி.விஜயபாஸ்கருடன் சேர்ந்து நாளை தவெகவில் இணைகிறார்.