×

காங்கிரஸ் எம்.பியாக பதவியேற்பு; ராகுல்காந்தியிடம் வாழ்த்து பெற்ற விஜய் வசந்த்!

2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வசந்தகுமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து, அந்த தொகுதிக்கு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற அன்றே இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில், மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். கடந்த மே 2ம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ராதாகிருஷ்ணனை விட அதிக வாக்குகள் பெற்று விஜய் வசந்த் வெற்றி வாகையை சூடினார்.
 

2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வசந்தகுமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து, அந்த தொகுதிக்கு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற அன்றே இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில், மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார்.

கடந்த மே 2ம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ராதாகிருஷ்ணனை விட அதிக வாக்குகள் பெற்று விஜய் வசந்த் வெற்றி வாகையை சூடினார். இந்த நிலையில், இன்று காலை தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்.பியாக விஜய் வசந்த் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் ஓம்பிர்லா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்ற பின்னர் பெருந்தலைவர் காமராஜர் புகழ் வாழ்க, தலைவர் ராஜீவ்காந்தி வழங்க என விஜய் வசந்த் அவையில் முழங்கினார். இதையடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்த விஜய் வசந்த் குமார் தனது தந்தை எழுதிய Steps to success என்ற நூலை வழங்கி அவரிடம் வாழ்த்துக்களை பெற்றார்.