×

கொள்கை எதிரி பாஜகவுடன் கூட்டணி... 45 தொகுதி, எதிர்க்கட்சித் தலைவர் பதவி! ஒகே சொன்ன விஜய்?

 

தவெகவைக் கூட்டணிக்குள் இழுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வரும் பாஜக டெல்லி தலைமை மார்ச் 15 அன்று விஜயை நேரில் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்காக டெல்லி செல்கிறார் விஜய். அதே நாள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்கிறார் என தகவல் வருகிறது. 

வலுவான திமுக கூட்டணிக்கு எதிராக அதிமுக கூட்டணியை முன்னிறுத்த முடியவில்லை. மோடி மூன்று முறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்ற பிறகும் கூட மக்களிடையே எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இதை ஒருவழியாகப் புரிந்துகொண்ட அமித்ஷா, விஜயைக் கூட்டணிக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். சென்னையில் அண்மையில் ஒரு ரகசிய சந்திப்பில் பாஜக சார்பில் டீல் பேசப்பட்டிருக்கிறது. இதற்கு உடனடியாக தவெக தரப்பில் இருந்து பதில் வராததால் தான் விஜயின் தனிப்பட்ட விவகாரங்கள் பொதுவெளிக்கு கசியவிடப்பட்டன. அது சர்ச்சையானதற்குப் பிறகு டீலுக்கு ஓகே சொல்லியிருக்கிறார் விஜய் என்கிறார்கள். ஆதவ் அர்ஜுனா இதற்கான சிக்னலைத்தான் நேற்று கொடுத்தார். ’ரஜினியைத் திமுக மிரட்டியது அதனால்தான் அவர் அரசியலில் இருந்து விலகிவிட்டார். ஆனால் விஜய் அப்படி விலகமாட்டார், திமுகவை எதிர்த்து தைரியமாக நிற்கிறார்’ என்று பேசியதில் ’ரஜினி உங்களை ஏமாற்றிவிட்டார், விஜய் ஏமாற்ற மாட்டார்’  என்பதுதான் மறைபொருள். 

மார்ச் 15 ஆம் தேதிக்கு மேல், திமுக என்னும் பொது எதிரியை வீழ்த்த கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் பாஜகவுடன் கூட்டணி வைக்கிறோம், கொள்கையை ஒருநாளும் விட்டுக் கொடுக்க மாட்டோம், இது தேர்தலுக்கான கூட்டணி மட்டும் தான் என்று விஜய் அறிவிக்கப்போகிறாராம். விஜயகாந்த் போல நீங்களும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிவிடலாம் என்று ஆசை காட்டப்பட்டுள்ளது. பாஜக மஞ்சள் தண்ணீரை ஊற்றி மாலையிட்டதும் தலையை ஆட்டியிருக்கிறார் விஜய்.   45 தொகுதிகள் வரை தவெகவுக்கு ஒதுக்கப்படலாம் என்று பேசப்படுகிறது.