☰
×

25 நிமிட ரகசிய பேச்சு... மோடி மனதில் இடம்பிடித்த விஜய்!

 

தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி - தமிழக முதல்வர் விஜய் இடையே நடந்த 25 நிமிட தனிப்பட்ட சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் பிரதமர் மோடி தமிழகம் வந்தது முதல், அவரை வழியனுப்பும் வரை துணையாக நின்றார் முதல்வர் விஜய். இது மத்திய - மாநில உறவில் ஒரு புதிய அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது. பிரதமரின் வருகைக்காக சுமார் ஒரு மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்துள்ளார் முதல்வர் விஜய். பிரதமர் மோடி, முதல்வர் விஜய், தமிழக ஆளுநர் அர்லேகர் ஆகிய மூவர் மட்டும் தனியாக சந்தித்து சுமார் 25 நிமிடங்கள் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்த சந்திப்பில் முதல்வர் விஜய் தமிழகத்தின் நலன்களை முன்வைத்து பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் நேரடியாக எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. காவிரி பிரச்சினை, தமிழகத்தின் கனவு திட்டமான கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும், கல்வி உள்ளிட்ட துறைகளுக்கான நிலுவையில் உள்ள மத்திய அரசு நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முதல்வர் விஜய் எடுத்துரைத்தார். கடந்த காலத்தை போல வீண் மோதல் போக்கு வேண்டாம், மத்திய மாநில அரசுகள் இணைந்து தமிழக வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை விஜய் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.


முதல்வர் விஜய்யின் இந்த இணக்கமான அணுகுமுறையை பார்த்து பிரதமர் மோடியும், ஆளுநர் அர்லேகரும் மகிழ்ச்சி அடைந்ததாக விமான நிலைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளுநர் அர்லேகர் நியமனத்தில் கூட விஜய்யிடம் ஆலோசனை கேட்கப்பட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.