×

செந்தில் பாலாஜியை சிறைக்கும் அனுப்பும் வேளையில் விஜய் தீவிரம்

 

கரூர் விவகாரத்தில் செந்தில்பாலாஜி மீது தனிப்பட்ட முறையில் கடும் கோபம் முதல்வர் விஜய்க்கு இருந்து வருகிறது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர்களில் முதலில் செந்தில் பாலாஜியை சிறைக்கு அனுப்பும் வேளையில் மிக தீவிரமாக களம் இறங்கி இருக்கிறார் முதல்வர் விஜய்.

இந்நிலையில் ஏற்கனவே அமலாக்க துறை வழக்கு செந்தில்பாலாஜி மீது நிலுவையில் உள்ள நிலையில், செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றால் எளிதாக வெளியே வர கூடாது, அந்த அளவுக்கு வழக்கு மிக வலிமையாக இருக்க வேண்டும் என முடிவு செய்த முதல்வர் விஜய். சமீபத்தில் முக்கிய அதிகாரிகளை அழைத்து பேசி இருக்கிறார். அப்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த  காலத்தில் அவர் செய்த முறைகேடுகள் அனைத்தையும் தோண்டி எடுக்க வேண்டும், தமிழக லஞ்ச ஒழிப்பு துறை அவர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும், இனி செந்தில்பாலாஜி நீதிமன்றம் , சிறை என தன் வாழ்நாள் முழுவதும் கழிக்க வேண்டும், அதற்கான வேலைகளை தீவிர படுத்துங்கள் என தெரிவித்தவர், இதில் எந்த அதிகாரியாவது செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக செயல்பட்டால் உடனே எனக்கு தகவல் கொடுங்க என தெரிவித்து இருக்கிறார் முதல்வர் விஜய்.

மேலும் தனக்கு நெருக்கமான சிலரிடம் முதல்வர் விஜய் பேசுகையில், என்னுடைய முகத்தை ஒரு முறை பார்த்து விட மாட்டோமா என என்ன காண வந்த மக்களின் உயிர்களில் விளையாடி விட்டார்கள், போதிய பாதுகாப்பை கடந்த கால அரசு கொடுத்து இருந்தால், கரூர் துயர சம்பவம் நடந்து இருக்குமா.? இதற்கெல்லாம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என முதல்வர் விஜய் தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த ஜூன் மாதம் இறுதிக்குள் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறைக்கு அனுப்பியே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் முதல்வர் விஜய், சமீபத்தில் டெல்லி பயணத்தின் போது, செந்தில் பாலாஜி தொடர்பான அமலாக்க துறை விசாரணைக்கு தமிழக அரசு சார்பில் என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய தயார் என முதல்வர் விஜய் உத்தரவாதம் கொடுத்துள்ளதாக  கூறப்படுகிறது.