“இடைத்தேர்தலில் அதிமுக, திமுக டெபாசிட் இழக்கணும்”- விஜய் அதிரடி
இடைத்தேர்தலில் 2 கட்சிகளை காலி செய்ய முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு மனுத்தாக்கலும் தொடங்கிவிட்டது. தவெக, திமுக, அதிமுக, நாதக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. "இடைத்தேர்தலில் இரு தொகுதிகளையும் கைப்பற்றினால் தான், எம்ஜிஆர் இமேஜ் உங்களுக்கு கிடைக்கும் எனவும், இடைத்தேர்தலின் வெற்றிதான், திமுக-அதிமுக இரு கட்சிகளையும் ஒரு சேர பலவீனப்படுத்த முடியும்" என்று தவெக ஆலோசகர்கள் விஜய்க்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள்.
அதற்கு விஜய், "நானும் அதையேத்தான் சொல்கிறேன்.. இடைத்தேர்தலின் வெற்றி நமக்கு முக்கியமானது. என்னுடைய எதிர்பார்ப்பு, திமுக-அதிமுக இரண்டையும் டெபாசிட் இழக்க வைக்க வேண்டும் என்பதுதான். அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நீங்கள் செய்யலாம். அதற்கான வழிகளை ஆராயுங்கள் என கட்சி நிர்வாகிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தியிருக்கிறார். ஆகவே இந்த இடைத்தேர்தல் 2 தொகுதிகளின் உள்ளூர் அரசியலையும் தாண்டி, விஜய்யின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கியமான டெஸ்ட்டிங் களமாகவே மாறியுள்ளது. திமுகவும், அதிமுகவும் தவெகவின் வேகத்தை கட்டுப்படுத்த, இந்தத் தேர்தலை பயன்படுத்த நினைத்தால், விஜய் இதையே தனது கட்சியின் அரசியல் வலிமையை நிரூபிக்கும் முதல் வாய்ப்பாக பார்க்கிறார்.